காசாவுக்குள் வீரர்களை இறக்கிய இஸ்ரேல்.!

Smoke rises following an Israeli bombardment in the Gaza Strip, as seen from southern Israel, Saturday, Dec. 16, 2023. (AP Photo/Ariel Schalit)

 “இறுதி எச்சரிக்கை”

பறந்த புது வார்னிங்! உச்சக்கட்ட பதற்றம் 

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், இப்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காசாவில் சமீபத்தில் தான் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை ஆரம்பித்திருந்த நிலையில், இப்போது தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

An Israeli tank takes position on the Gaza Strip border in southern Israel, Wednesday, March 19, 2025. (AP Photo/Ariel Schalit)

மேலும், காசா மக்களுக்கு இஸ்ரேல் கடைசி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், ஹமாஸ் பணய கைதிகளை விடுவிக்க மறுப்பதாகச் சொல்லி இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வான்வழித் தாக்குதலை ஆரம்பித்தது.

இந்தச் சூழலில் இஸ்ரேல் அடுத்த கட்டமாக தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை மத்திய மற்றும் தெற்கு காசாவில் குறிப்பிட்ட இடங்களைத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கும் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முக்கியமான பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற்று வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தைக் கைவிட்ட இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. அந்த வான்வழித் தாக்குதலில் சுமார் 450க்கும் மேற்பட்டோர் காசாவில் கொல்லப்பட்டனர்.

Israel Gaza war | Latest News & Updates | BBC News

இந்த வான்வழித் தாக்குதலுக்கு மறுநாளே இஸ்ரேல் இந்த தரைவழி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.  தீவிர தாக்குதல் இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்தவும் வடக்கு மற்றும் தெற்கு காசா இடையே பஃபர் மண்டலத்தை உருவாக்கவும் மத்திய மற்றும் தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்” என்றார்.

நெட்சாரிம் வழித்தடத்தின் மையப்பகுதியை தங்கள் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளைப் பிரிக்கும் முக்கிய பாதையான நெட்சாரிம் வழித்தடத்தின் பெரும்பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சலா ஏ-தின் சாலை வரை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சுற்றி வளைக்கும் இஸ்ரேல்? மறுபுறம் தெற்கு காசா எல்லையிலும் இஸ்ரேல் தனது படைகளைக் களமிறக்கியுள்ளது.

நெட்சாரிம் வழித்தடத்தைத் தொடர்ந்து தெற்கு காசா எல்லையிலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தத் தயாராகும் வகையில் இங்குப் படைகளை இறக்கியுள்ளது. இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க காசாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து போராடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணய கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வருவதாகவும், மத்தியஸ்த திட்டங்களை நிராகரிப்பதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், பொறுப்பற்ற மற்றும் ஒருதலைபட்ச நடவடிக்கைகள் மூலம் போர் நிறுத்தத்தை முறித்து பணய கைதிகளை ஆபத்தில் ஆழ்த்தியதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருவதால் போர் தொடர்ந்து வருகிறது.   இறுதி எச்சரிக்கை இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “காசா மக்களே, இது உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை. அமெரிக்க அதிபரின் ஆலோசனையைக் கேளுங்கள். பணய கைதிகளை திருப்பி அனுப்பி ஹமாஸை உங்கள் மண்ணில் இருந்து அகற்றுங்கள்.

அதன் பிறகு உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும். அப்போது தான் உங்களால் உலகின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும்” என்றார்.

Previous Story

 செல்வாக்குமிக்க இம்தியாஸ்  ராஜினாமா கட்சிக்கு பாரிய இழப்பாகும்!

Next Story

தேசபந்து: பிணை நிராகரிப்பு!