களத்துக்கு வரும் காத்தனார்!

-நஜீப்-

கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வை காத்தான் நகரத்து தலைமகன் என்று நாம் உச்சரித்தால் எவரும் கோபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு. காரணம் காத்தான்குடி வரலாற்றில் அவர் ஒரு ஒப்பற்ற நாயகன்.

ஆளுநர், அமைச்சர் என்ற பதவிகளிலும் பலமுறை  வேலை பார்த்தவர். அவர் ஒரு காரியக்காரனும் கூட. அஷ்ரஃப் காலத்தில் அவருடன் நாமக்கும் நெருக்கம் இருந்தது. நெடுநாளைக்குப் பின்னர் அவர் அரங்குக்கு வந்திருக்கின்றார்.

காத்தான் நகரை ஒரு அரபிய நகர்போல் கட்டியெழுப்பியதில் அவர் பங்கு அளப்பரியது. அவர் நெடுநாளைக்குப் பின்னர் அரசியல் பற்றிப் பேசி இருக்கின்றார். இந்த அரசு இருக்கும் வரை அரபு நாடுகள் இலங்கைக்கு உதவாது என்பது அவர் கணக்கு.

ஆட்சி மாறினால் அரபுலகுடனான தொடர்புகளை புதிய ஆட்சியாளர்களுக்குத் தன்னால்  ஏற்படுத்தி நாட்டுக்கு உதவு முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

ஏதோ வருகின்ற ஒன்பதாம் நாள் (09.07.2022) தெற்கில் ஒரு சுனாமி என்றும் கதை அடிபடுகின்றது. சுனாமி துரோகிகளை அள்ளிக் கொண்டு போனால் கலாநிதியும் கைகொடுப்பார்  என்று எதிர்பார்க்க முடியும்.

 நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கோட்டா நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் 

Next Story

எரிபொருள் கதை ஏமாறாதீர்!