கருவுறுதலில் பிரச்சனை

துத்தநாகம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு தேவைபடுகிறது. உடலுக்கு போதுமான அளவு துத்தநாகத்தை பெற வேண்டும்.

துத்தநாக பற்றாக்குறை மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

துத்தநாக குறைபாடு முழுமையான பார்வை அல்லது பகுதி நேர பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். அதாவது மாலைக்கண் நோய் போன்ற நிலையை உண்டாக்கலாம்.

துத்தநாக சத்தின் காரணமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, காயங்களைக் குணப்படுத்துதல் போன்று உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், துத்தநாகக் குறைபாட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, இந்தத் தேவையை நிறைவேற்ற என்ன சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜிம்மிற்கு செல்பவர்கள் அதன் மஞ்சள் பாகத்தை அதாவது மஞ்சள் கருவை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள், ஆனால் முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகம் நிறைந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர வைட்டமின் பி12, தயாமின், வைட்டமின் பி6, ஃபோலேட், பாந்தெனோனிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இதில் காணப்படுகின்றன.

பூண்டில் துத்தநாகம் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், அயோடின், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் காணப்படுகின்றன.

கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் துத்தநாக குறைபாடு! | Zinc Deficiency Causes Fertility Problems

தர்பூசணி பழத்தின் விதைகளில் நிறைய துத்தநாகம் உள்ளது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் பராமரிக்கப்படுகிறது. இதற்கு தர்பூசணி விதைகளை கழுவி வெயிலில் காயவைத்து உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் துத்தநாக குறைபாடு! | Zinc Deficiency Causes Fertility Problems

துத்தநாகக் குறைபாடு இருக்கும்போது, ​

உடல் தோன்றும் அறிகுறிகள் – எடை இழப்பு – காயங்களை தாமதமாக குணமடைதல் – அடிக்கடி வயிற்றுப்போக்கு – பசியிழப்பு – மன ஆரோக்கியத்தில் தாக்கம் – மிகவும் பலவீனமாக உணர்தல் – முடி உதிர்தல் – சுவை மற்றும் வாசனை உணர்வு இழப்பு

என்று அவர் கூறியுள்ளார்.

Previous Story

இலங்கை வரும் சீன கப்பல்!

Next Story

துபாய் வேலைக்கு சென்ற பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்