“கருப்பாடுகளைக் கட்டிப் போடுங்கள்”

-ஜஹாங்கீர்-

1.ஏன் இந்தக் கோபம்

பீப்பாவுக்கு 35 டொலர்கள் குறைவாக இலகு கடனில் எரி பொருள்தர முடியும் என்று ரஷ்யா சொன்னாலும் அதனை வாங்குவதில் இலங்கை இந்த நெருக்கடியான நேரத்திலும் ஆர்வம் தெரிவிக்காமல் இருக்கின்றது. அதற்கு அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள வேண்டி வரும் என்ற அச்சமும். அடுத்தது கமிஷ் வியாபாரம் பண்ண முடியாது என்று நிலையும். மூன்றாவது காரணம் ரஷ்யாவுடன் கொடுக்கல் வாங்கள் செய்தால் ஐஎம்எப் மற்றும் மேற்கு நாடுகளின் உதவி கிடைக்காமல் போகும் என்ற அச்சமுமாம். ரஷ்யா தூது அனுப்பியும் ‘கோஹோம்’ கண்டு கொள்ளாமல் இருக்குதாம்.!

2.எதிரும் புதிரும்

சர்வதேசம் இலங்கையுடன் நல்லுறவில் இல்லை எனவே அரசு வன்முறையைக் கைவிட்டு தனது நல்லெண்ணத்தை உலகிற்குக் காட்ட வேண்டும். அப்போதுதான் ஐஎம்எப் போன்ற அமைப்புக்களின் உதவி நமக்குக் கிடைக்கும், என அரசுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கின்றார் நீதி அமைச்சர் விஜேதாச. 21 டை நல்லபடியாக நிறைவேற்றி சர்வதேச உதவிகளை பெற்றுக் கொள்ளக் கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்றும் அவர் அரசைக் கேட்டிருக்கின்றார். மறு பக்கத்தில் இது எல்லாம் தேவையில்லாத வேலை. மக்களுக்கு அரசியல் சீர்திருத்தம் தேவையில்லை;. சப்பாடுதான் தேவை இது வீரசேக்கர வாதம்.

3.நாட்டில் தேர்தல் கிடையாது

இப்போது நாட்டில் எந்தத் தேர்தலும் கிடையாது. நெருக்கடியை சரி செய்து விட்டுத்தான் தேர்தல் எனப் பகிரங்கமாக பேசி வருகின்றார் உலகில் எல்லோரையும் தெரிந்து வைத்திருக்கின்ற நமது பிரதமர் ரணில். மற்றுமொரு இடத்தில் இந்த நெருக்கடி நிலை குறைந்தது இன்னும் ஐந்து ஆறு வருடங்களுக்காவது இருக்கும் என்றும் அவர் கூறி இருக்கின்றார். இந்த இரு கருத்துக்களுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்தால் உள்ளாட்சித் தே;தலும் கிடையாது மாகாண சபைத் தேர்தலும் கிடையாது. பொதுத் தேர்தலும் இல்லை என்பதுதான்.

4.ஒரு நாடு இரு நீதி

மே 9ல் கொழும்பில் துவங்கிய அரச தரப்பு வன்முறைக்கு மூல காரணமாக இருந்தார் என்று நீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ஜொனிக்கு பிடியானை பிறப்பிக்க, ஆள் சில நாள் தலைமறைவாகி இருந்து பின்னர் நீதி மன்றில் ஆஜரானர். அவரை நீதி மன்றம் விசாரித்து அன்றே விடுதலையும் செய்து விட்டது. ஆனால் பாதையில் கீரினார்கள்-எழுதினார்கள். அகிம்சை வழிகளில் போராட்டங்களை நடத்தினார்கள் என்று குற்றம் சட்டப்பட்ட ஏழு பேர் கடந்த வாரம் தமாகவே முன்வந்து பொலிசில் சரணடைய அவர்களை நீதி மன்றம் தடுப்புக்காவலில் வைக்க உத்தவிட்டுள்ளது.ஒரு நாடு பல சட்டம்.!

5.தெருவில் நிற்கும் தேசம்!

இது வரை நமது தலைவர்கள் எமக்கு சப்பாடு போட்டது, வைத்தியம் பார்த்தது நமது அரச நிருவனங்கள் இங்கியது பொதுப் பிரயாணங்களை மேற்கொண்டது அபிவிருத்தி வேலைகள் செய்தது எல்லாமே அடுத்தவனிடம் வாங்கிய கடன் காசில்தான் என்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது. ‘அப்பா’ கணியை, விளை நிலத்தை, தோட்டத்தை, வீட்டை, மனைவி, பிள்ளை குடிகளை, அடமானம் வைத்துதான் இதுவரை நமக்கு சாப்பாடு போட்டிருக்கின்றார் என்பது, கடன் கொடுத்தவன் வாசலில் வந்து வம்பு பண்ணும் போதுதான் தெரிகின்றது அப்ப பார்த்த வேலை.! ஆனால் நாட்டு அப்பா வரவிலோ கோடி கோடியாம்.! நாம் மோசம் போயிருக்கின்றோம்.?

6.ஏமாற்றுப் பேர்வலிகள்

நாம் வாழ்கின்ற இடங்களில் சில ஏமாற்றுப் பேர்வலிகள் இருப்பார்கள். அவர்கள் நா கூசாமல் உள்ள எல்லாப் பொய்களையும் சொல்லி மக்களிடம் பணம் பறிப்பார்கள்-கடன் வங்கி ஏமாற்றுவர்கள் இந்த நிலையில்தான் இலங்கையைத் தற்ப்போது சர்வதேசம் பார்க்கின்றது பேசுகின்றது. நாம் இலங்கைக்கு உதவினாலும் அது ஊழல் பேர்வலிகளான ஆட்சியாளர்கள் கைகளில் சிக்கிவிடும் வாய்ப்பே அதிகம் என்று ஐஎம்எப்.ஐ எச்சரித்திருக்கின்றார் ஓபிஎஸ். தலைவர் மார்க் பிரவுன். எனவே ஐஎம்எப். உதவி அவசரமாகக் கிடைக்க வாய்பே இல்லை என்றுதான் தெரிகின்றது.

7.நிரந்தர அரசே தீர்வு!

அரசியல் தலைவர்களது தனித் தீர்மானங்களே இந்தக் கொடூர பொருளாதார நெருக்கடிக்குக் காரணம். மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது மிகுந்த அவநம்பிக்கையிலும் கோபத்திலும் இருக்கின்றார்கள். இதனால் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு நீடிக்கின்றது. ஒரே ஒரு உறுப்புரிமையை வைத்து ஆட்சி செய்கின்ற ரணில் அரசு, ராஜபக்ஸாக்களின் கைப் பொம்மை இதனை சர்வதேசமும் நம்பவில்லை. இங்கு ஸ்தீர அரசொன்று அமைந்தால்தான் இலங்கைக்கு உதவுவது பற்றி சர்வதேசம் யோசிக்கும் என்ற நிலை. எனவே காலம் தாழ்த்தாது பொதுத் தேர்தல்தான் தீர்வாக இருக்க முடியும் என்பது அணுரகுமார கருத்து.

8.கருப்பாடுகளை கட்டுங்கள்!

ஜனாதிபதி கேட்டாவுக்கு எல்லை மீறிய அதிகாரத்தையும் பசிலுக்கு நாடாளுமன்றப் பிரவேசத்துக்கும் பாதை சமைத்து நாட்டையே அழிவுக்குக் கொண்டு சென்ற 20 க்கு கைதூக்கிய முஸ்லிம் அரசியல் டீல்களுக்கு குடும்பம் சகிதம் இலவசமாக புனித ஹஜ் பயணத்தில் இணைந்து கொள்ள வாய்புப்புக்கள் என்று ‘ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ்’ செய்தி சொல்லி இருக்கின்றது. ஒருவருக்கு போய்வர 25 இலட்சமாம். நெருக்கடியான இந்த நேரத்தில் இவர்களுக்கு இப்படியும் ஒரு பரிசா என்று கார்டியன் கேள்வி எழுப்புவதுடன் அந்தக் கருப்பாடுகளைக் கட்டிப் போடுமாறும் அது கேட்டிருக்கின்றது.(நன்றிSTK)

9.நாங்களும் நண்பர்களே

கடந்த வெள்ளி மாலை நமது ஜனாதிபதி மேற்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தார். அங்கு வந்தவர்கள் நெருக்கடியான நேரத்தில் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்த மற்றுமொரு கருத்து சற்று வித்தியாசமாக இருந்தது. எங்களையும் நண்பர்களாகக் கருதுங்கள் என்று அவர்கள் ஜனாதிபதி ஜீ.ஆர். முகத்திற்கே கேட்டிருக்கின்றார்கள். அப்படியானால் இந்த நாடுகளை ஏற்கெனவே ஜனாதிபதி நல்லுறவுடன் நடத்தவில்லை என்றுதானே அதன் அர்த்தமாக இருக்கும். ஆபத்தில் மட்டும் ஆதரவு தேடினால் இப்படிதான் பேசுவார்கள்.

10.கொடித்துவக்கு அதிரடி

நாகானந்த கொடித்துவக்கு என்பவர் நீதி மன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்திருக்கின்றார். கடந்த தேர்தலில் கோட்டா போட்டியிடுகின்ற நேரத்தில் இலங்கை தேர்தல் விதிகளுக்கு ஏற்ப அவர் தான், இரட்டைப் பிரசா உரிமைக்காரன் அல்ல என்பதனை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொண்டதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வில்லை. பேராசிரியர் ராத்னஜீவன் ஹூல் இது பற்றி அன்று கோள்வி எழுப்ப ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அதனை அலட்சிம் செய்திருக்கின்றார். கடந்த வாரம் தற்போதய ஜனாதிபதி அன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை என்பதனை ஹூல் சத்தியக் கடதாசி மூலம் உறுதி செய்திருக்கின்றார். நடக்கப் பேவது என்ன?

நன்றிSTK

Previous Story

ஜனாதிபதிGR தனது நிகழ்ச்சிநிரலையே முன்னெடுக்கின்றார்- வேலு குமார்.MP

Next Story

"சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்" -  இலங்கை தம்பதி கண்ணீர்