-நஜீப்-
நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்
கடந்த ஆட்சி காலத்தில் நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத்தை தூண்டி அதன் மூலம் நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிப்பதில் கம்மன்பில முக்கிய சூத்திரதாரி.
புதிய அரசு பதவியேற்றதும் ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு அரசு விசாரணைகளை முடக்கிவிட்டிருக்கின்றது. இந்த நேரத்தில் அதனைக் குழப்புகின்ற பணியை இவர் இப்போது மேற்கொண்டு வருகின்றார்.
இதனை அவர் தனது தேர்தல் பரப்புரைக்கும் பாவிப்பதுடன் குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ஸாக்களை விடுவிக்கின்ற முயறச்சியாகவும் இது பார்க்கப்படுகின்றது. சானி அபேவிக்கிரம மற்றும் பொலிஸ் அதிகாரிகளை குற்றவாளிகளாக்கி அவர் ஒரு நடாகத்தை அரங்கேற்றுவருகின்றார்.
இதனை அரசாங்கம் மற்றும் பேராயர் கடுமையாக நிராகரிக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் கடைசி நேரத்தில் திட்ட மிட்ட ஒரு சதி மூலம் இந்த அறிக்கையைத் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.