கம்பஹா பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள்: ஆயுர்வேத வைத்தியர் கைது!

கைது செய்யப்பட்ட போது 6,000 போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர், முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் (டிசம்பர் 05) கம்பஹா, புத்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்த பெண் ஏழு ஐஸ் பொதிகள் மற்றும் 38 மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

கம்பஹா பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள்: ஆயுர்வேத வைத்தியர் கைது! | Drugs Gampaha School Ayurveda Doctor Arrested

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக மூன்றாம் தரப்பினர் போதைப்பொருளை சிற்றுண்டிச்சாலையில் வைத்துள்ளதாக தெரியவந்தது.

இந்நிலையில் சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ருக்மல்கம்வில பகுதியில் உள்ள சிறுவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமொன்றை பொலிஸார் சோதனையிட்டனர், இதன் போது ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுர்வேத வைத்தியராகக் காட்டிக் கொண்டதாகக் கருதப்படும் கைதானவர், கைது செய்யப்பட்ட போது அவரிடம் 6,576 போதை மாத்திரைகள் மற்றும் 5,500,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous Story

யூசுப் என் நெஸ்ரி கோல்: அரை இறுதிக்கு  மொராக்கோ அணி!

Next Story

உலகின் மிகச் சிறந்த சினிமாவாகத் தேர்வான பாலியல் தொழிலாளி குறித்த படம்