இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த மாதம் பெரிய மோதல் வெடித்திருந்தது. அப்போது ஈரானின் உயர்மட்டத் தலைவராக இருந்த அயதுல்லா கமேனி தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
இந்தச் சூழலில் தான் அவர் முதல்முறையாக மீண்டும் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் வெடித்தது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாகச் சொல்லி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கே நிலைமை மோசமானது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதால் மத்தியக் கிழக்கில் ஒருவிதப் பதற்றம் நிலவியது.
கமேனி தலைமறைவு இதற்கிடையே மோதல் முடிவுக்கு வந்த பிறகும் கூட கமேனி எங்கு இருக்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது. அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தே வந்தார். இதனால் பல்வேறு கேள்விகளும் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் பல வாரங்களுக்குப் பிறகு கமேனி மீண்டும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அஷுரா விழாவில் கமேனி கலந்து கொண்டார். மோதலுக்கு முன்பே கூட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் குறைத்திருந்தார்.
பல மாதங்களுக்குப் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கமேனி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தலைமறைவான கமேனி 12 நாள் போரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலின்போது ஈரான் நாட்டின் பல ராணுவத் தலைவர்கள் மற்றும் அணுசக்தி நிபுணர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கமேனி பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். இது தொடர்பான தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஷியா முஸ்லிம் நாட்காட்டியின் மிக முக்கியமான நாளான அஷுராவைக் குறிக்கும் வகையில் தெஹ்ரானில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தான் கமேனி கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது அதில் கமேனி உள்ளே நுழைவதும் அவரை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் பார்த்தவுடன் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்புவதும் தெரிகிறது.
பொது நிகழ்ச்சி ஜூன் 13ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து கமேனி பொதுவெளியில் தோன்றியது இதுவே முதல் முறை. தாக்குதலின் தொடங்கியவுடனே கமேனி எங்கு இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்ள முடியாமல் போனது.
வெறுமன பதிவுகளை மட்டுமே அவர் பகிர்ந்தார். பாதுகாப்பு காரணங்களால், கமேனி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. மேலும், கமேனி எப்போதுமே மத நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கேற்பார்.
இருப்பினும், அவை கூட பதிவு செய்யப்பட்ட பேச்சுகளாகவே ஒளிபரப்பப்பட்டன. இது பல்வேறு வகையான தகவல்கள் பரவக் காரணமாக இருந்தது. இந்தச் சூழலில் தான் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமேனி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
இஸ்ரேல் ஈரான் விவகாரம் முன்னதாக இஸ்ரேல் ஈரான் மோதல் 12 நாட்கள் நீடித்தது. அப்போது அமெரிக்கா இந்த மோதலில் தலையிட்டு பங்கர் பஸ்டர் வெடிகுண்டை ஈரான் அணு உலை தளங்கள் மீது வீசியது. அதன் பிறகே மோதல் முடிவுக்கு வந்தது. மோதல் முடிவுக்கு வந்தாலும் கூட மத்தியக் கிழக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.