நஜீப்
நன்றி:25.01.2025 ஞாயிறு தினக்குரல்
பிரதமர் ஹரினிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தனது முதலாவது கையெழுத்தையும் போட்டார் எதிரணித் தலைவர் சஜித்.
ஆனால் இன்றுவரை அது சபாநாயகரிடம் கைளிக்கப்படவில்லை. இது பற்றி தேடிப்பார்த்த போது சிறுபான்மை கட்சிகள் இதில் ஆர்வம் காட்டுவதாக இல்லையாம்.
குறிப்பாக தமிழ் தரப்புக்கள் பிரதமருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகின்றது. அதனால் இழுபறியோ.! இதுவரை பிரதமர் பதவி வகித்தவர்களில் உயர் கல்வித் தகைமையுடையவராக ஹரினிதான் இருக்கின்றார்.
அவர் ஒரு பெண் என்பதால் மட்டம் தட்டும் நோக்கில்தான் சில பெண்ணியில் விரோதிகள் அவர் மீது குரோதத்துடன் நடந்து கொள்கின்றார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள்.
பிரதமர் ஹருனி பதவியில் இருந்து தூக்கப்பட வேண்டும் என்பது சிலரின் விருப்பமும் ஆசையுமாக இருப்பதை நாமும் பார்க்கின்றோம்.
ஆனால் அதற்கு வாய்ப்பே கிடையாது. அதற்காக அவர்கள் காண்கின்ற கனவை குழப்பவும் நாம் தயாராக இல்லை.!





