கண்ணீர் கதை!

-நஜீப்-

சிறுபான்மை மண்ணில் இரவிரவாக புத்தர் சிலைகள் முளைப்பது வழக்கமானதுதான். ஆனால் இந்தக் கதை சற்று வித்தியாசமானது. தமது சொந்த நிலங்களை கண்ணீர் கதை பார்க்கப் போய் ஆடைகள் பிடுங்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதை இது.

இந்தத் தகவலை மூத்து  அரசியல்வாதி ஹசனலி நமக்கு விபரமாக சொன்னார்!. கரும்பு விவசாயத்துக்கு என பெற்றுக் கொண்ட தமது காணிகளைப் பார்க்கப் போனவர்களை அடித்துத் துன்புருத்தி கொலை மிரட்டலும் செய்திருக்கின்றார்கள். அத்தோடு  இவர்களை நிர்வாணமாக்கி போடோவும் எடுத்து சம்பவத்தை வெளியே சொன்னால் அவற்றை சமூக வலைத்தளங்களில் போடப் போவதாகவும் அச்சுருத்தியும் இருக்கின்றனர்.

தாக்கியவர்கள் கல்லோய காணி அதிகாரசபை ஊழியர்கள் எனவும் தெரிகின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணக்கு வரவில்லை. சமூக உரிமைக்காக கட்சி வைத்திருக்கும் தலைமைகள் இதனை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

காரணம் அவர்கள் இந்த மண்ணைச் சாராதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இந்த வேதனைகள் புரிவதில்லை.

நன்றி23.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சாரா ஜெஸ்மின் காதல் காவியம்!

Next Story

ஒலியைவிட 3 மடங்கு வேகம் கொண்ட சீனா ‘ஸ்பை ட்ரோன்’- அமெரிக்கா