கண்டி முஸ்லிம் பிரதிநிதித்துவம்

2020ல் நடக்கின்ற நமது பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்காக ஹலீம், ரவூப் ஹக்கீம், லாபீர் ஹாஜி, முத்தலிப், பாரிஸ் ஹாஜி, இஸ்திகார், மன்சில் முத்தலிப் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.

இன்னும் பலரது பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்தாலும் நமது பார்வையில் இவர்களைப் பற்றி முதல் சுற்றில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எம்.எச்.எம்.ஹலீம்: இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் பிரதிநிதி. அடுத்தவர் ரவூப் ஹக்கீம்: இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர். ஹலீமுக்கு அடுத்த இடத்தில் வாக்குகளைப் பெற்றவர். இவர்கள் இருவரும் சஜித் அணியில் தொலைபேசி சின்னத்தில் களத்தில் நிற்கின்றனர். ஹலீம் கடைசி நேரம் வரை ரணிலுடன் இருந்து இறுதி நேரத்தில் சஜித் அணிக்குத் தாவியவர்.

அடுத்தவர்கள் எவரும் இதுவரை பாராளுமன்றம் போகாதவர்கள். லாபீர் ஹாஜியாரும், முத்தலிப் ஹாஜியாரும் ரணில் அணியில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள். மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தவர் லாபீர் ஹாஜி, முத்தலிப் உறுப்பினர் இடைவெளியை நிரப்பச் சபைக்குத் தெரிவானவர்.

டயமன் சின்னத்தில் போட்டியிடுகின்ற இஸ்திகார் அக்குரண பிரதேசபைத் தலைவராக இருப்பவர். இவரே டயமன் அணிக்குத் தலைமை தாங்குகின்றார். மன்சில் முத்தலிப, இவர் ஜேவிபியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கண்டி மாநகரசபை உறுப்பினர். இவர் ஜேவிபியில் அதிக வாக்குகளைப் பெற்று நகரசபைக்குத் தெரிவானவர்.

முன்சில் முத்தலிப் திசைகாட்டிச் சின்னத்தில் செஞ்சட்டைப் பிரதிநிதித்துவத்திற்காக களமிறங்கி இருக்கின்றார். மேற்சொன்ன அனைவரும் ஏதோவகையில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவானவர்கள். பாரிஸ் ஹாஜி இவர் கண்டி அரசியலுக்குப் புதியவர். முன்னாள் மு.கா. மாகாணசபை உறுப்பினர் உவைஸ்-கலாநிதி! அவர்களின் சகோதரர். இது இவர்கள் பற்றிய ஒரு துவக்க அறிமுகம்.

இவர்களை குறுக்கு விசாரணை என்ற நிகழ்ச்சியூடாக ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ்.கொம் என்ற அரசியல் இணையதளம் சந்திக்க இருக்கின்றது. அதன் பின்னர் அவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை நாம் வாசகர்களுக்கு தெரியப்படுத்த இருக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

பொதுத் தேர்தலில் துப்பாகிப் பாவனை மந்தமான போக்கு!

Next Story

வேலு குமார் வெற்றி வாய்ப்பு எப்படி?