கண்டி முஸ்லிம்களின் அரசியல் வரைபடம் மாறும்!

‘புரட்சி பண்ண வாருங்கள் சமூகத்துக்கு பகிரங்க அழைப்பு’

இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகள் கண்டிய முஸ்லிம்களின் அரசியல் வரை படத்தையே மாற்றி அமைக்கின்ற ஒரு தேர்தலாக அமைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது என அரசியல் ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் என்ற இணையதளத்தில் எழுதப்பட்டிருக்கின்ற ஒரு கட்டுரையில் ஜனரஞ்சகமான கட்சிகளில் வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொள்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கு சமூகம் வழங்கிய வாய்ப்பை துஸ்பிரயோகம் செய்ததாலும் தன்னலத்துக்கு பாவித்துக் கொண்டதாலும் அல்லது பேச வேண்டிய இடங்களில் மௌனமாக நின்றதாலும் அவர்கள் மீது சமூகம் மிகுந்த கோபத்தில் இருகின்றது.

இதற்கெதிரான கிளர்ச்சி இந்தத் தேர்தலில் கண்டியில் வெளிப்படும் என்று அந்தக் கட்டுரையில் மேலும் சொல்லபட்டிருக்கின்றது. எனவே கண்டி மக்களின் உணர்வுகளை லாபீர் ஹாஜியார் ஊடாக வெளிப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுக்கின்றது.

இதில் அவர்கள் வெற்றி பெறுவார்களானால் லாபீர் ஹாஜியார் தலைமையில் புதியதோர் அரசியல் தலைமை கண்டியில் உருவாவதுடன் அது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்துக்கான நல்லதொரு தெரிவாகவும் இருக்கும் என்று அந்தக் கட்டுரையில் மேலும் சொல்லப்பட்டிருக்கின்றது. இது கண்டிய முஸ்லிம்களின் ஒரு புள்ளடிப் புரட்சியாகவும் அமையலாம் என்று எதிர் பார்க்கப்படுக்கின்றது.

எனவே பிரதான கட்சிகளில் குறிப்பாக கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பதுடன். லாபீர் ஹாஜிக்கு எதிராக போலியான பரப்புரைகளைத் தற்போது மேற்கொண்டு வருவதையும் நாம் பார்க்க முடிகின்றது.

சில ஊடகங்கள் கூட இந்த சதி முயற்சியில் இறங்கி இருப்பது தெரிய வந்திருகின்றது. இது பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றது. எனவே கண்டியில் புதிய தலைமைத்துவமொன்றைக் கட்டியெழுப்ப முனைகின்றவர்கள் இது இவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கின்றது எனவும் அந்தக் கட்டுரையில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

ஏன் இந்த மௌனம்!

Next Story

எச்சரிக்கை! கண்டியவர்களே சிந்தியுங்கள!;