இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நகரம் நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்றது. இதனை மூச்சுவிடத் தினறுகின்றது என்று அல்லது தள்ளாடுகின்றது நகரமுடியாது இருகிப் போய்கிடக்கின்றது என்று பல விதமாக விமர்சிக்க முடியும்
இலங்கை பௌத்த பக்கதர்களின் மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பதிவு என்று கூட நமக்கு இதனைச் சுட்டிக் காட்ட முடியும். இந்தியா மற்றும் சவுதி-மக்கா போன்ற இடங்களில் இப்படியாக இந்து, இஸ்லாமிய பக்தர்களின் நெரிசல்களினால் பல நூறு பேர் ஒரே நேரத்தில் மண்டுபோன பதிவுகளும் இருக்கின்றன.
மழை வெயில் குளிர் இரவு பகல் என்று பாரமல் மக்கள் பல இரவுகள் கண்டி-தலா மளிகையில் இந்த புனித தாது தரிசனத்துக்காக பல திசைகளில் வீதிகளில் வரிசையாக காத்திருக்கின்றார்கள். ஏற்பாட்டாளர்களும் பொலிசும் தன்னால் முடிந்த பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இப்போது புதிய எச்சரிக்கையாக கண்டி நகருக்கு தரிசனத்துக்கு எவரும் வர வேண்டாம் என்று பொலிஸார் மக்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் அல்லது தடை விதிக்கின்ற ஒரு நிலை அங்கு ஏற்பட்டிருக்கின்றது. இது பற்றி நமது சகோதர ஊடகவியலாளர் பாரத தென்னகோன் பார்கையை நாம் இங்கு சிங்கள மொழியில் தருகின்றோம்.