கணிப்பாளர் கணக்கில் கமலா ஹாரிஸ் வெற்றி; டிரம்ப் தரப்புக்கு அதிர்ச்சி

PHILADELPHIA, PENNSYLVANIA - JULY 13: Vice President Kamala Harris speaks during a campaign event at the Asian and Pacific Islander American Vote Presidential Town Hall at the Pennsylvania Convention Center on July 13, 2024 in Philadelphia, Pennsylvania. Harris continues campaigning ahead of the presidential election as Democrats face doubts about President Biden's fitness in his run for re-election against former President Donald Trump. (Photo by Drew Hallowell/Getty Images)

 ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்’ என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார்.

Latest Tamil News

உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார்.

தேர்தல் வந்தாலே தேர்தல் கணிப்பாளர்களுக்கு வேலை வந்துவிடும். நவம்பர் 5ம் தேதி தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது குறித்து, ஆங்கில செய்தி சேனலுக்கு, பிரபல தேர்தல் கணிப்பாளர் ஆலன் லிச்மேன் அளித்த பேட்டி: அமெரிக்காவின் அடுத்த அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார். இதுவே எனது கணிப்பு முடிவு. அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்.

அதிபர் தேர்தலில் ஒருவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை உறுதி செய்ய, 13 கேள்விகளுக்கு விடை தெரிந்தால் போதும். அந்த வகையில், கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக 8 புள்ளிகளும், டிரம்புக்கு எதிராக 5 புள்ளிகளும் உள்ளன.

இரண்டு கேள்விகளுக்கான விடை டிரம்புக்கு சாதகமாக மாறினாலும், எனது பார்முலாவின்படி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவை போதுமானதாக இருக்காது. இதனால் டிரம்ப் வெள்ளை மாளிகையை அடைய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Previous Story

வங்கதேசம்: ஷேக் ஹசீனா விலகியதால் ஆதாயம் அடைவது பாகிஸ்தானா? சீனாவா?

Next Story

ஜனாதிபதித் தேர்தல் புதிய கள நிலவரம்!