கடிதத்துக்கு தொழில் வேண்டும்!

நஜீப்

நன்றி: 17.08.2025 ஞாயிறு தினக்குரல்

தனது பூட்டன் பாட்டன் அப்பன் தான் தனது குழந்தைகள் அரசியல் எதிர்காலம் பற்றி நாமல் பேசியது கடந்தவாரம் வைரலானது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சுகளுக்குத் தொழில் வழங்கும் வாய்ப்பை இந்த அரசு இல்லாமல் செய்திருப்பதற்குத் தனது  கண்டத்தை பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார் அவர்.

அவரது சகாக்களின் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பேச்சாளருமான சஞ்ஜீவ நாமல் கருத்துக்களுடன் தனக்;கு உடன்பாடு கிடையாது என்று தெரிவித்து கட்சிக்குள் இருக்கின்ற முரன்பாட்டை பகிரங்கப்படுத்தி இருக்கின்றார்.

நாமலின் இந்தக் கதைக்கு அவரது சகாக்கள் பலரும் சமகாலத்துக்குப் பொறுத்தமில்லாத வார்த்தைகள் இவை என சுட்டிக்காட்டிய போது தான் வாய்உலறி இருப்பதாகக் கூறி சமாளித்திருக்கின்றார்.

இவர் எப்போதாவது அதிகாரத்துக்கு வந்தால் அவர்களுக்கு கூஜா தூக்குவோருக்கு மட்டும்தான் தொழில் வாய்ப்பு என்பது தெரியவருகின்றது. மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Previous Story

ஹர்த்தாலுக்கு கடையைப்பூட்டு

Next Story

துசித ஹல்லொலுவ அதிரடி கைது