நஜீப்
05.10.2025 நன்றி ஞாயிறு தினக்குரல்
இங்கு நாம் சொல்லப்போவது தாஜூதீன் வழக்கை கடவுளே கையில் எடுத்துவிட்டார் என்ற செய்திதான்.
இந்தோனேசியாவில் கைதான பெக்கோ சமன் வழங்கிய தகவலில் அனுரவிதான கமகே அல்லது கச்சா என்பவர் தனது இரு பிஞ்சுக் குழந்தைகளுடன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றிய மேலும் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
சமுதிதவுடனான இந்த கச்சா நடத்திய விவாதத்தில் தன்னை ராஜாக்கள் கொல்ல போவது பற்றியும் அவர்களுடன் தனக்கு முன்பிருந்த தனிப்பட்ட உறவுகளையும் அங்கு பகிரங்கப்படுத்தி இருந்தார்.
சொன்னபடி கொலையும் நடந்தது. கச்சா கொலைக்கான ஆயுதங்கள் முன்னாள் மொட்டு அமைச்சர் ஜொனீ வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ஆயுதங்களும் அதற்கான கைதுகளும் தொடர்கின்றன.
தாஜூதீன் கொலை நடந்த இடத்திலும் அன்று இந்த கச்சா நின்றிந்திருக்கின்றார். எனவேதான் தாஜூதீன் வழக்கை கடவுளே கையிலெடுத்து விட்டார் என்று கூறுகின்றோம்.
இதனால்தான் எதிர்பாராதவிதம் பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.