நஜீப்
12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல்.
தாஜூதீன் கொலை செய்யப்பட்ட இடத்தில் நின்றது தனது கணவன் கச்சா-விதான கமகே தான் என்பதனை அவருடன் பதினேழு வருடங்கள் குடித்தனம் நடாத்திய மனைவி உறுதி செய்திருக்கின்றார்.
விசாரணை செய்து வருகின்ற பொலிசாரும் அந்த இடத்தில் கச்சா நின்றதை உறுதி செய்திருக்கின்றனர்.
தாஜூதீன் கொலை நடந்த அந்தக் காலப்பகுதியில் இந்தக் கச்சா அல்லது விதானகமகே பாதுகாப்பு அமைச்சில் தொழில் பார்த்திருக்கின்றார் என்ற தகவலும் இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
சிரிலிய நிறுவனத்துக்காக சிரந்தி பாவித்த கேஏ-0642 என்ற டிபேன்டர் வாகனமும் தாஜூதீன் கொலை நடந்த இடத்தில் நின்றதை சீசீரி. கெமராவில் பதிவாகி இருக்கின்றதாம்.
கச்சா மகனும் குடும்பத்தினரும் நடாத்திய ஊடகச் சந்திப்புக்களில் சொல்லப்பட்ட கதைகளில் பெரும் குழறுபடிகள் இப்பதும் அவர்களை யாரோ வழிநடத்தி அவர்களும் இப்போது சிக்கலில் மாட்டி இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.