கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்- வைகோ 

கச்சத்தீவு ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரான வைகோ என்கின்ற வையாபுரி கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

Tamil Nadu fishermen issue.." - Vaiko MP who shouted in the Rajya Sabha

கடற்றொழிலாளர்கள் பிரச்சினை

2025 ஆம் ஆண்டில் மட்டும் 150க்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் கைது மற்றும் தாக்குதலால் தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்றொழிலாளர்கள் கைது செய்வதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து திரும்பப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Previous Story

உங்கள் தந்தை எத்தனை பேரை வேட்டையாடினார்..!   நாமலுக்கு பதிலடி

Next Story

கல்வி:கண்ணீர் விட்டு கதறிய மந்திரிகள் ...!