கச்சத்தீவை தர மாட்டோம்-இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்

 விஜய் மேடையில் பேசிட்டா கொடுத்துடுவோமா?

கச்சத்தீவை ஒரு போதும் இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் பதில் அளித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்டுத் தாருங்கள் என தவெக தலைவர் விஜய் ஒரு அரசியல் மேடையில் பார்த்ததாகவும் அதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு பிரதான தொழிலே மீன்பிடிதான். அந்த வகையில் இந்த பகுதி மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்க செல்வதுண்டு.

அவ்வாறு செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவர்களை  கைது செய்யவும் செய்கிறார்கள். இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படை நம் மீனவர்களை கைது செய்வது, படகுகளை பறிமுதல்  செய்து வருகிறது. இலங்கை சிறைகளில் வாடி வருகிறார்கள். மீனவர்கள் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் மத்தியில் ஆட்சி அமையும் போதெல்லாம் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் இலங்கைக்கு  கச்சத்தீவு எழுத்து மூலமாகவே கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த கச்சத்தீவு மீட்கப்பட்டால்தான் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க முடியும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. இதற்கு கட்சிகளும் மாறி மாறி யார் காரணம் என்பதை பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் தவெக மதுரை மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசுகையில், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்து வருகிறார்கள்.

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக, கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும் என பேசியிருந்தார். கச்சத்தீவை யார் தாரைவார்த்தார்கள் என்ற வரலாறு தெரியாமல் விஜய் பேசுகிறார் என தமிழக பாஜகவினர் விமர்சித்தனர்.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத் சந்தித்தார். அவர் பேசுகையில் “கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு. இதை ஒரு போதும் இந்தியாவுக்கு தர மாட்டோம்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இதனால் தேர்தல் மேடைகளில் பல்வேறு கட்சிகள் தங்கள் வாக்குகளை பெற நடக்காத ஒவ்வொரு விஷயத்தையும் கூறுவார்கள்.

கச்சத்தீவை மீட்போம் என அந்த அரசியல் கட்சிகள் கூறுவது இது முதல்முறையல்ல. இது போல் பலமுறை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் எதுவும் மாறிவிடாது. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் ஒரு மேடையில் பேசியதை நான் பார்த்தேன்.

அதனை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம். எப்போதும் இந்தியாவுக்கு அதை வழங்க மாட்டோம். இந்திய அரசு தரப்பில் யாராவது கருத்து தெரிவித்தால் அப்போது பார்க்கலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Previous Story

රනිල් පාර්ලිමේන්තුවට...? රාජිත හෙට එයිද...?

Next Story

ජී එල් පීරිස් , රනිල් ගැන බොරු කියලා.