ஓய்விலிருந்து திரும்புகிறார் மொயின் அலி?

இங்கிலாந்து டெஸ்ட் அணியிலருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதஙம மொயின் அறிவித்தார். 64 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள மொயின் அலி , 195 விக்கெட்டுகள், 2914 ரன்களை அடித்துள்ளார். இன்னும் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தால் 200 ஐ தொட்டு இருக்கலாம்.

 தற்போது, ஒருநாள், டி20 அணியில் தொடர்ந்து மொயின் அலி விளையாடுகிறார். ஐபிஎல், THE HUNDERD போன்ற தொடரில் கவனம் செலுத்துகிறார். ஆர்வம் இல்லை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ டூட் மற்றும் பயிற்சியாளர் சில்வர்வுட் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மொயின் அலி விலகியதாக கூறப்பட்டது. எனினும் அதனை மறுத்துள்ள மொயின் அலி, நீண்ட போட்டிகளில் விளையாடுவதற்கான ஆர்வத்தை இழந்துவிட்டேன் என்று கூறினார்.

மெக்குல்லம் அழைப்பு அடிக்கடி காயம் மற்றும் வாய்ப்பும் கிடைக்காததால் இந்த முடிவை எடுத்தேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் புதிய பயிற்சியாளர் மெக்குல்லம், தம்மை மீண்டும் அணிக்கு திரும்ப அழைத்தார்.

அதற்கு ஏதாவது பெரிய தொடர் மற்றும், அதற்கான வாய்ப்பு இருந்தால் என்னை அப்போது அழையுங்கள் என்று கூறினேன். அது அவமானமாகிவிடும் நான் மீண்டும் அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால், அது தற்போது அணியில் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச்சை அவமானப்படுத்தும் வகையில் இருக்கும்.

அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்பு கொடுத்து ஆதரவு தர வேண்டும். இப்போது நானும் திரும்பினால் அவருக்கு தேவையில்லாத அழுத்தம் தான் ஏற்படும் என்று மொயின் அலி கூறினார். ஐபிஎல் தொடரில் பிளான் மெக்குல்லமும், நானும் ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறோம்.

அப்போது எனக்கு அவருடன் நல்ல நட்பு எனக்கு ஏற்பட்டது என்றும் மொயின் அலி விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் மொயின் அலி கலக்கிய நிலையில், அப்போதே கொல்கத்தா அணி பயிற்சியாளராக இருந்த மெக்குல்லம், மொயின் அலியிடம் இதை பற்றி பேசியதாக தகவல் வெளியானது.

Previous Story

தன்னை தானே திருமணம்:  குஜராத் பெண்!

Next Story

விரட்டப்பட்ட முஷர்ரப்