ஓடும் சப்ரி! அடுத்தவரை தேடும் GO?

2022 ஆம் ஆண்டுக்காக இரண்டாவது முறையாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக  அலி சப்றி  பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாகவும் அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி என்பதை யோசனை முன்வைத்துள்ள அணியினர் தெளிவுப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இப்படியான நிலைமையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் சம்பந்தமாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்படக் கூடும் என எதிர்க்கும் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை குறைப்பதற்கு பதிலாக புதிய வரவு செலவுத் திட்டம் மூலம் எதிர்ப்பு மேலும் அதிகரித்து வெடித்து சிதறக் கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் நீடிக்கும் என்பதுடன் IMF  உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியில் இருக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அலி சப்றி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

 எளிமையாக இடம்பெற்ற ஏ ஆர் ரஹுமான் வீட்டு திருமணம்!

Next Story

கோட்டா அழைப்பை சஜித் ஏற்ப்பா? அது அவரது அரசியல் அழிவு!!!