ஒற்றை எம்.பி ரணில் பிரதமர் ! வெடிக்கும் புது கலகம்!!

இலங்கையில் அரசியல் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக மீண்டும் அதாவது 6-வது முறையாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றிருக்கிறார். புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் என்ன பலம் என்பதுதான் இப்போதைய விவாதப் பொருள்.

இலங்கை பொருளாதார நெருக்கடியால் கிளர்ச்சிகள் ஏற்பட்டது. பொது மக்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்து பதவியில் நீடிக்காமல் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதர நாடுகளின் சர்வாதிகாரிகள் அடித்து கொல்லப்பட்டதை போல தமக்கும் நேர்ந்துவிடுமோ என அஞ்சி கடற்படையிடம் அபயம் தேடி இருக்கிறார் மகிந்த ராஜபக்சே.

சஜித் பிரேமதாச

இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமர் யார்? என்கிற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதான் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தாம் பிரதமராக பதவியேற்க வேண்டும் எனில் ஜனாதிபதி பதவியில் இருந்து குறுகிய காலத்தில் கோத்தபாய ராஜினாமா செய்தாக வேண்டும் என நிபந்தனை விதித்தார் சஜித். இதனால் பிரதமர் பதவி, சஜித் பிரேமதாசவுக்கு நிராகரிக்கப்பட்டது.

பிரதமரான ரணில் இந்நிலையில் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றவரான? ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் பிரதமராக இன்று பதவியேற்றார். இலங்கையில் 6-வது முறையாக ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகி இருக்கிறார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கும் வலிமையான காரணம் இல்லாமல் இல்லை. ரணிலின் அரசியல் இலங்கையின் பழமையான கட்சிகளில் ஒன்று ஐக்கிய தேசிய கட்சி.

1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி இது. இதன் தலைவர்தான் ரணில் விக்கிரமசிங்கே. 1977-ம் ஆண்டு பியகம தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.பி.யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் ரணில். 1994-ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரானார்.

இலங்கையின் அசாதாரண சூழ்நிலைகள் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டால் மொத்தம் 5 முறை பதவி வகித்தவர் ரணில். 2 முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டும் தோற்றவர்.

படுதோல்வி

நியமன எம்.பி 1977-ம் ஆண்டு முதல் 8 முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையே சந்திக்காதவராக இருந்தார். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு 9-வது முறையாக தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார் ரணில் விக்கிரமசிங்கே.

2020-ம் ஆண்டு இலங்கை தேர்தல் மிக மோசமான பாடங்களை கொடுத்தது. அதாவது இலங்கையில் மாறி மாறி ஆட்சி அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டுமே பெருந்தோல்வியை சந்தித்தன. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு இடமும் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடமும் இல்லை என்பதுதான் தேர்தல் ரிசல்ட்.

இதன் பின்னர் நியமன எம்.பிக்கள் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கே எம்.பி.யானார். தற்போதைய நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி.தான். அதுவும் ரணில் விக்கிரமசிங்கே மட்டுமே அந்த எம்.பி. உலக வரலாற்றிலேயே ஒற்றை எம்.பி.யை கொண்ட ஒரு கட்சிக்கு பிரதமர் பதவி இலங்கையில்தான் வழங்கப்பட்டுள்ளது;

அதுவும் தேர்தலில் தோற்றுப் போய் மக்களால் நிராகரிக்கப்பட்டு நியமன எம்.பி.யான ரணில் விக்கிரம சிங்கேவுக்கு பிரதமர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் ஜீரணிக்க முடியாமல் கலகக் குரல் எழுப்பி வருகின்றன.

Previous Story

ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி! எத்தனை நாள் கதிரையில் இருப்பார்?

Next Story

அரசியல் விபாச்சாரத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலை 10 கோடி!