ஈரான் மீது இப்போது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதை விட.. அடுத்த சில நாட்கள் கழித்து பெரிய அளவிலான திட்டங்களை வகுத்து அதன்பின் முறையான தாக்குதல்களை நடத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவை அறிவுறுத்தி உள்ளாராம்.
ஈரான் போர் விவகாரத்தை தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேல் மிக தவறாக கையாண்டு வருகிறது. முதலில் பாலஸ்தீனம் மீது விடாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கே இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பாலஸ்தீனியர்களை கொன்று வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உடனே இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் போரை தொடங்கியது.
மோசமாக செயல்படும் நெதன்யாகு போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா.
இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் பலியானார். இதற்கு அடுத்த நாளே ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.
அதோடு கடந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் அப்போது நடந்தது. ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். ,
சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.
இஸ்ரேல் கடந்த சில வாரங்களாகவே ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஒரு மாதமாக ஹிஸ்புல்லா இயக்கத்தை கதி கலங்க வைத்து வருகிறது இஸ்ரேல். சமீபத்தில்தான் பேஜர் தாக்குதலை நடத்தியது.
அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இருக்கும் பெய்ரூட்டில் இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதல்களை, வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்.. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த சில வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். . இந்த தாக்குதல் எல்லாவற்றிற்கும்தான் தற்போது ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரான் மீது அட்டாக் இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் மீது இப்போது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதை விட.. அடுத்த சில நாட்கள் கழித்து பெரிய அளவிலான திட்டங்களை வகுத்து அதன்பின் முறையான தாக்குதல்களை நடத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவை அறிவுறுத்தி உள்ளாராம்.
இஸ்ரேல் விருப்பத்தின்படியே, அமெரிக்கக் கடற்படையின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல், மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே நிலையில் கடும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
அணுசக்தி மூலம் இயங்கும் போர்க்கப்பல் அணுசக்தி மூலம் இயங்கும் இந்த சூப்பர் கேரியர், அண்மையில் தென் சீனக் கடலில் வழக்கமான பயிற்சிகளின் ஒரு பகுதியாக நேரடித் துப்பாக்கிச் சூடு மற்றும் எரிபொருள் நிரப்பும் பயிற்சிகளை மேற்கொண்டது.
இந்தோ-பசிபிக் பகுதியிலிருந்து மத்திய கிழக்குக்குச் செல்ல இதற்கு ஒரு வாரம் ஆகும். யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில், F/A-18இ/F சூப்பர் ஹார்னெட்கள், E/A-18G க்ரோலர்ஸ், E-2டி அட்வான்ஸ்டு ஹாக்ஐஸ் மற்றும் M.H-60R/S சீஹாக்ஸ் போன்ற அதிநவீன விமானங்கள் கொண்ட ஏர் விங் 9 பிரிவு உள்ளது.
அர்லே பர்க் வகையைச் சேர்ந்த யூ.எஸ்.எஸ். ஸ்ப்ரூயன்ஸ் மற்றும் யூ.எஸ்.எஸ். மைக்கேல் மர்ஃபி ஆகிய வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல்களும் இக்குழுவில் அடங்கும். இக்குழுவில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் யூ.எஸ்.எஸ். ஃபிராங்க் இ. பீட்டர்சன் ஜூனியர் இடம்பெறுகிறது.
மேலும், யூ.எஸ்.எஸ். ரூஸ்வெல்ட் என்ற அர்லே பர்க் ஏவுகணை தகர்ப்பு கப்பல் பெர்சியன் வளைகுடாவில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நெதன்யாகு ஈகோ இதற்கெல்லாம் காரணம் நெதன்யாகு ஈகோ.
முதலில் அவர் இந்த போரை உள்நாட்டில் தனது ஆட்சி நீடிக்க சாதகமாக பார்க்கிறார். தனக்கு எதிராக அரசியல் சூழல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக்கொள்கிறார். ஈகோ காரணமாக.. இஸ்ரேலை மட்டுமன்றி உலக நாடுகளையே போருக்குள் இழுக்க தொடங்கி உள்ளார்.
நெதன்யாகு நினைத்து இருந்தால்.. அமைதி பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. ஒரு நாடு போரில் ஈடுபட்டால் அந்நாட்டு தலைவருக்கே இது சாதகமாக இருக்கும். அப்படித்தான்.. நெதன்யாகு இந்த போரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்.





