ஒமிக்ரான்: அதிரும் அமெரிக்கா! நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டு!!

NEWS-1

அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவலால் மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டு நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு தொற்றின் விகிதம் அதிகரித்திருக்கிறது. தற்போது ஒரேநாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவின் மறு உருவம் என்று கூறப்படும் ஒமிக்ரான் தொற்றானது பெரியவர்களை விட குழந்தைகளுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவில் மருத்துவமனைகளில்  குழந்தைகள் வார்டு நிரம்பி வழிகின்றன.

இதுகுறித்து நியூயார்க் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பால் குழந்தைகள் வார்டு நிரம்பி வழிவதாக கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிற்கு உட்பட்டோர் என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

NEWS-2

ஒரே நாளில் 3 லட்சம்

அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று 3 லட்சத்தை கடந்து இருப்பது சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா கிருமி வந்து பிடியை இறுக்கி வருகிறது. அங்கு தினசரி கொரோனா தொற்று 1 லட்சமாக இருந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 3, 09,336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 1,799 கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

டெல்டாவகைகொரோனாதொற்றுபன்மடங்குஅதிகரித்துள்ளதைஅடுத்துசோதனைக்காகஅமெரிக்காமுழுவதும்பரிசோதனைமையங்களில்மக்கள்கூட்டம்அலமோதுகிறது.மக்கள்கூட்டத்தைகட்டுப்படுத்தமுடியாமல்கொரோனாசோதனைமையநிர்வாகிகள்திணறிவருகின்றனர்.

கிறிஸ்துமஸ்பண்டிகையின்போதுமக்கள்கூட்டம்கூட்டமாககொண்டாட்டங்களில்பங்கேற்றதால்கொரோனாதொற்றுஅதிகரித்துள்ளதாகமருத்துவநிபுணர்கள்தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில்கொரோனாபரவல்விஸ்வரூபம்எடுத்துள்ளதைஅடுத்துதடுப்பூசிநடவடிக்கைகளைபிடன்அரசுதீவிரப்படுத்திஉள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போட்ஸ்வானா, தென்ஆப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே, நமீபியா, எஸ்வாடினி, லெசோதோ மற்றும் மாளவி ஆகிய 8 தென்ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதித்த பயண தடையை நீக்கியுள்ளார்.  இதனை வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆப்ரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண தடையை ஜோ பிடன் அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Story

2021இல் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்!

Next Story

எலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.!