நஜீப்
நன்றி:01.03.2026 ஞாயிறு தினக்குரல்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் உளவாளிகள் பலர் இருப்பதாக தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதனால் அந்த அணியில் நடாக்கின்ற கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற முடிவுகள் தீர்மானங்கள் ஆளும் தரப்புக்கு முன்கூட்டியே சென்றடைவது தெரிய வந்திருக்கின்றது.
அதனால் வருகின்ற அமர்வுகளின் போது குறிப்பிட்ட சிலரை கூட்டத்துக்கு அழைக்காமல் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதாம். அதே நேரம் சஜித் அணிக்குள் கோஷ;டி மோதல் உச்சம் தொட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. அண்மையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் அஜித் பெரேராவும் சுஜிவ சேமசிங்ஹவும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஜிபரும் கட்சித் தலைமை எடுத்த சில தீர்மானங்கள் தொடர்பில் தமது கண்டனங்களை அங்கு தெரிவித்திருக்கின்றார். அதே நேரம் அர்ஷத டி சில்வாவுக்கும் சஜித்துக்குமிடையே பனிப்போரொன்று கட்சியில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
அர்ஷhவை ஆள் வைத்து அடிக்கின்ற ஒரு வேலையும் ஐமச.க்குள் நடந்து கொண்டிருப்பதாவும் சொல்லப்படுகின்றது.





