நஜீப்
நன்றி: 04.10.2026 ஞாயிறு தினக்குரல்
ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்து நாட்டை ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று செல்லாக்காசாகி அரசியலில் காட்சிப் பொருள் அல்லது சமசமாஜ-கம்யூனிசக் கட்சிகள் நிலைக்கு ஆளாகி இருக்கின்றது.
கட்சியில் ரணில் ஆதிக்கம் மற்றும் சர்வாதிகாரமே இதற்கு அடிப்படைக் காரணம். இதனால்தான் சஜித்தும் கட்சியிலிருந்து வெளியேற வேண்டி வந்தது.
ராஜபக்ஸாக்களைப் பாதுகாக்கப்போய் அந்தக் கட்சியை ரணில் சிறுபான்மை மக்களிடமிருந்து அண்ணியப்படுத்தி விட்டார். புதிய தகவல்களின் படி ரணில் அணி இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது.?
வஜிர சாகல தொடர்ந்தும் ரணில் நலன்களை பாதுகாக்கும் வியூகத்தில் இருக்கும் அதே நேரம் இவர்கள் எதிர்காலத்தில் மொட்டுக் கட்சியுடன் இணையலாம் என்ற ஒரு நிலை.
ருவன் விஜேவர்தன மற்றும் நவின் திசாநாயக்க போன்றவர்கள் கட்சி தீர்மானங்களில் கடும் கோபத்தில் இருக்கின்றார்கள்.அவர்கள் ஐமச. இணைய தூது விட்டாலும் சஜித் அதனைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றாராம்.




