ஐஎம்எப் விதித்துள்ள நிபந்தனை! மாற்று வழி இல்லை -ரணில் தரப்பு

இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்காலத் தேர்தல்களில் கட்சி அரசியலுக்குப் பதிலாக, வளர்ந்து வரும் சவால்களுக்கு மத்தியில் நாட்டைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்படும் பணியை நிறைவேற்றக்கூடிய தலைவர் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு அரசியல் பேதமின்றி சகலரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என நம்புகின்றோம்.

ரணில் தவிர, வேறு எந்த மாற்றுவழியும் இல்லை

இலங்கைக்கு ஐஎம்எப் விதித்துள்ள நிபந்தனை! மாற்று வழி இல்லை என கூறும் ரணில் தரப்பு | Imf Loan To Sri Lanka

கட்சி அரசியல் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சவாலாக மாறியுள்ளது. ஜனாதிபதி கூறியது போல் எதிர்கால தேர்தலில் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் 50 சதவீத வாக்குகளை பெற முடியாது.

தற்போதுள்ள சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர, வேறு எந்த மாற்றுவழியும் இல்லை என்பது மிகவும் வெளிப்படையானது. ஒரு சமயம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நாம் சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னொரு பிரிவினர் நாம் அதற்குச் செல்லக்கூடாது என்கிறார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். அது நடக்கும்போது, அதற்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். இந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளில் பெரும்பாலானவர்கள் ‘இரட்டை நடிப்பில்’ ஈடுபட்டுள்ளனர்.

நமது வெளிநாட்டுக் கடன் என்று சொல்பவர்கள் உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அச்ச மனநோயை உருவாக்கும் முயற்சியை மறுகட்டமைக்க வேண்டும். வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கக் கோரினால், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதை நாம் புறக்கணிக்க முடியாது. அதுவும் நியாயமானதல்ல.

சர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு நாம் செல்லவில்லை என்றால், வேறு மாற்று இல்லை.

எனினும், இவ்விடயத்தில் உத்திகள் எடுக்கப்படும் போது சந்தர்ப்பவாதம் எவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னுக்கு வருகின்றது என்பதை நாம் பார்க்க முடியும். இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. எதிர்க்கட்சியினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், உண்மையைப் பேசத் தயங்குகிறார்கள்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக தற்போது நடைபெறுகின்ற வேலைத்திட்டத்தை எப்படியாவது தடுத்து, அதில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளும் முயற்சியை அனைவராலும் உணர முடியும்.

அண்மைக் காலத்தில் சில பிரிவினர் அதிகாரத்தைக் கைப்பற்றி இறுதியாக இனம், மதம், தேசியம் போன்றவற்றை முன்னிறுத்தி நாட்டை அழிவை நோக்கி இழுத்துச் சென்றதை எம்மால் பார்க்க முடிந்தது.

மக்களை ஏமாற்றும் அதே பழைய யுக்தியைப் பின்பற்றும் நிலையிலேயே அவர்கள் இன்னும் உள்ளனர். அவர்கள் தங்கள் உள்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக வேறு வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Previous Story

நிலா யாருக்குச் சொந்தம்!

Next Story

தேசிய ரீதியில் பாபுல் ஹஸன் முதலிடம்