ஏ.ஆர்.ரஹ்மான் -55

இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவரை பற்றிய அரிய தகவல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

முதல் ஆசியர்

இந்தியாவில் வெளியிடப்பட்ட Avengers : Endgame படத்திற்காக சிறப்பு பாடலை உருவாக்கியது ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஒரே ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையையும் பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

4 சர்வதேச விருதுகள்

ஒரே ஆண்டில் சர்வதேச அளவிலான உயரியதாக கருதப்படும் 4 விருதுகளை வென்றவரும் ஏ.ஆர்.ரஹ்மான் தான். 2009 ம் ஆண்டு Slumdog Millionaire படத்திற்காக ஆஸ்கார் விருது, இரண்டு Grammy விருதுகள், ஒரு BAFTA விருது, ஒரு Golden globe விருதினை பெற்றார்.

சிறு வயது சாதனை

ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழந்தை பருவத்திலேயே தூர்தர்ஷனின் புகழ்பெற்ற Wonder Baloon ஷோவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒரே சமயத்தில் நான்கு கீ போர்டுகளை வாசித்து அனைவரையும் அசர வைத்தார்.

வெளிப்படை தன்மை

ஏ.ஆர்.ரஹ்மான் Rangeela படத்தில் வரும் Hai rama பாடலுக்கு பின்னணி இசையமைத்திருந்தார். இந்த பாடல் 1960 ம் ஆண்டு முகல்  ஆசாம் அமைத்த கிளாசிக்கல் இசையை தழுவியே அமைக்கப்பட்டதாம். இந்த தகவலை ரஹ்மானே ஒருமுறை கூறி உள்ளார்.

ஒரே நாளில் பிறந்தநாள்

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகரும் ஒரு இசையமைப்பாளர். இவர் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் பணியாற்றி உள்ளார். ஜனவரி 6 ரஹ்மானின் பிறந்தநாள் மட்டுமல்ல, அவரது மகன் அமீனின் பிறந்தநாளும் ஜனவரி 6 தான்.

ரஹ்மான் பெயரில் தெரு

2013 ம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டது. Ontario மாகாணத்தில் Markham பகுதியில் உள்ள ஒரு தெருவிற்கு தான் இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் அவதாரம்

Le musk என்ற விரிச்சுவல் ரியாலிட்டி படத்தை இயக்கியது ஏ.ஆர்.ரஹ்மான் தான். இந்த படம் சர்வதேச அளவில் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

 

 

Previous Story

USA:குடியிருப்பில் தீ 13 பேர் பலி!

Next Story

கஜகஸ்தான்: ரஷ்ய படை விரைந்தது – பலர் பலி!