நஜிப்
நன்றி: 05.04.2026 ஞாயிறு தினக்குரல்
கம்மன்பில புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஐமச. தலைவர் பிரசன்னமாகி இருக்கவில்லை. அது ஏஐ. தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்று அடித்துக் கூறுகின்றார் அந்தக் கட்சி முக்கியஸ்தர் நளின் பண்டார.
சஜித்துக்கு எக்காரணம் கொண்டும் அந்த வைபத்தில் பங்குகொள்ள முடியாது என்று வாதிடுகின்றார் நளின். ஆனால் சஜித் அங்கு போனது உண்மை.
அவர் எந்த முகத்துடன் அங்கு போக முடியும் என்பதுதான் நளின் பண்டார முன்வைக்கிற தர்க்கம். நிகழ்வில் சஜித் பங்கு கொண்டது தொடர்பில் சிறுபான்மை கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் கடும் கோபம்-விமர்சனங்கள் தொடர்கின்றன.
இது பற்றி நமக்குக் கிடைத்த தகவல்படி சில கட்சி முக்கியஸ்தர் நாமங்களை உச்சரித்து அவர்களின் கட்டாயத்தின் பேரிலே தான் அந்த நிகழ்வுக்குப் போக வேண்டி வந்ததாக சொல்லி தலைவர் சஜித் சமாளிக்க முனைகின்றாராம். அவரது நியாயத்தை யாரும் ஏற்பதாக இல்லை.





