எரி பொருள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.?

நாளைய தினம் இரு டீசல் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ள நிலையில் டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஒரு கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், மற்றைய கப்பலில் 41 ஆயிரம் மெற்றிக்தொன்னும் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளன. அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்! | Happy News Release Sri Lanka Petroleum Corporation

அடுத்துவரும் கப்பல்களில் எரிபொருள் தரையிறக்கப்படுவதற்கு முன்னர் கட்டணங்களை செலுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்! | Happy News Release Sri Lanka Petroleum Corporation

கப்பல் கட்டணத்தில் 30 வீதம் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய கட்டணத்தை செலுத்த தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 22ம் திகதி மேலும் 35 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோலை எடுத்துவரும் மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்! | Happy News Release Sri Lanka Petroleum Corporation

31 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் பிரிதொரு கப்பல் எதிர்வரும் 21ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதற்கமைய அடுத்த வாரம் மொத்தமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும், 70 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான பெற்றோலும் கிடைக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்! | Happy News Release Sri Lanka Petroleum Corporation

இதேவேளை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 90 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெயை எடுத்துவரும் கப்பல் நாட்டுக்கு வர தயாராகியுள்ளது.

இதனால் அடுத்த வாரம் முதல் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமன்றி சகலருக்கும் டீசல் விநியோகிக்கப்படுமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Previous Story

ரணிலுக்குப் பதில் உறவினர் ருவன் MP

Next Story

மைத்திரி மீண்டும் ஜனாதிபதி!