-நஜீப்-
நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்
நமது வார இதழ் வாசகர்களின் கரங்களைச் சென்றடைந்திருக்கின்ற இந்த நேரத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும். புதிய ஜனாதிபதி பதவியேற்ற ஒரு மாதங்கள் பூர்த்தியாகி இருக்கின்ற இந்த நேரத்தில் வந்திருக்கின்ற இந்த முடிவானது வருகின்ற மாதம் 14ம் திகதி நடக்க இருக்கின்ற 2024 பொதுத் தேர்தலுக்கான ஒரு அளவு கோலாகவும் இது பார்க்கப்படும்.
பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி அனுர ஆட்சிக்கு எந்தளவுக்கு மக்கள் அங்காரம் வழங்கி வருகின்றார்கள் என்பதும் இதில் தெரியவரும். கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கின்ற போது இதில் சரிவு காணப்பட்டால் எதிரணயினர் அதனை ஒரு பேசு பொருளாக எடுத்தக் கொள்ளும் நிலையும் இருக்கின்றது.
எதிரணிக்கு மேலும் சரிவாக இருந்தாலும் அதிகாரத்தில் இருப்பவர் பக்கம்தான் வாய்ப்பு அதிகம் என்று சுதாகரித்துக் கொள்வார்கள். இந்தத் தேர்தலில் ஜேவிபி. தலைவர் ரோஹன விஜேவீரவின் மகனும் தனியாக ஒரு அணியைக் களத்தில் இறக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஒரு ஆசனம் கிடைத்தாலும் அது பெரும் இசுவாக மாறும்.
பின் குறிப்பு: நாம் இந்தக் கட்டுரையை அச்சுக்கு அனுப்பி வைத்திருந்த நாள் (25.10.2024) வெள்ளிக் கிழமை. தேர்தல் தினம் அதனை அடுத்த நாள் 26.10.2024. இப்போது இணையத்தில் செய்தியை நாம் பதிவேற்றம் செய்யும் இன்றைய தினம் 27.10.2024 ஞாயிறு.
தேர்தல் முடிவுகள் வந்து நாம் சொல்லும் விமர்சனங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. ஆளும் தரப்பு 300 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி என்றும் ஒரு கணக்குச் சொல்லப்படுகின்றது.
இவை எல்லாம் அற்பமான நயவஞ்கத் தனமான விமர்சனங்கள். மொத்தம் 17 வாட்டாரங்களில் 15 வட்டாரங்களில் ஆளும் தரப்பு வெற்றி பெற்றிருக்கின்றது. இதற்கான (%) வீதம் பற்றிய அந்த விமர்சர்கள் பேசத்தயாராக இல்லை. இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம்.