NPP.முதல்வர்கள் ஓகேயாம்!

நஜீப்

நன்றி: 19.10.2025ஞாயிறு தினக்குரல்

மாகாணசபை தேர்தல் அறிவிப்பு செய்யப்படுவதற்கு முன்னரே சஜித் அணியில் நான்கு பேர் தமது நாடாளுமன்ற உறுப்புரிமைகளைத் துறந்து அந்தத் தேர்தலுக்கு முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்க இருப்பதாக கட்சி முக்கியஸ்தர்களான மத்தும பண்டார மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்திருக்கின்றார்கள்.

துணிச்சல் பராட்டத்தக்கதுதான். முஜிபருக்கு நடந்தது நடக்காமல் இருந்தால் ஓகே. வடக்கு கிழக்கில் பதவி விலக எவரும் அவர்களுக்கு இல்லை. மேல் தெற்கு மாகாணங்களுக்கும் இன்னும் எவரும் தெரிவாகவில்லையாம்.

அப்போ வடமேல் வடமத்தி மத்திய உவா சப்ரகமுவ என்பவற்றில் நான்கு இடங்கள் ஓகோ. இவர்களுக்கு அந்த இடங்களில் ஓரிரு ஆசனங்கள் மட்டும் இருப்பதால் அவர்களின் முதலமைச்சர் வேட்பாளர்களை இனம் கண்டு கொள்வது மக்களுக்கு ஒன்றும் பெரிய காரியம் கிடையாது.

தேர்தல் அறிவிப்புச் வந்த பின்னர் இவர்கள் விட்டது அண்டப் புளூகா அல்லது நிஜமா என்பது தெரிய வரும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous Story

Zohran Mamdani could make history as New York’s first Muslim mayor

Next Story

3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி