-நஜீப்-
நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல்
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றவர்கள் தொடர்பான கதை இது. இந்த நிதியத்தில் ஏழ்மைக்கு உதவி, வறிய மாணவர் கல்வி அபிவிருத்தி, மத மேம்பாடு, சமூக மேம்பாட்டுக்கு உதவி புரிந்தவர்களைக் கௌரவித்தல் ஆகிய காரணங்களுக்கு காசு பெறலாம்.
ஆனால் இதில் எந்த வகையில் சேராத கனவான்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த பலர் பிச்சைக்காரர்களாக நடந்து கொண்டிருப்பது இதில் தெரிய வந்தது. இப்போது அதனைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகள் அதற்கு கூறுகின்ற நியாயங்கள் மிகவும் கேவலமாக இருக்கின்றது.
தன்னை நோய் பார்க்க வந்த ஜனாதிபதி மைத்திரி நிதி ஒதுக்கி இருக்கின்றார் தயாசிரி ஜயசேக்கர. விமலவீர திசாநாயக்க இந்தப் பணம் பெற்றது தவறாயின் தன்னைத் தூக்கிலிடுமாறு கேட்டிருக்கின்றார். அதே போன்று விதுர விக்கிரமநாயக்க நானும் இந்த நாட்டுக் குடிமகன்; அந்தப் பணத்தில் உதவி பெற தனக்கு உரிமை இருக்கின்றது என்று நியாயம் கூறுகின்றார்.
கோடிக் கணக்கில் பணம் பெற்றவர்கள் வரிசையில் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்தன, அமைச்சர்களான ரஞ்சித் செய்சா, கெஹெல்லிய ரம்புக்கெல முக்கியமானவர்கள்.