எனது விருப்பப்படிதான் 21 வரும்!                   அண்ணனை தூக்கியது…!-கோட்டா

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டுக்காக  ஜனாதிபதி எடுத்த முடிவு

நாட்டுக்காக தான் அந்த கடினமான தீர்மானத்தை எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தனது விருப்பத்தின் பேரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரணில் மீது அதீத நம்பிக்கை

ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து அவரை பிரதமராக நியமித்தேன். அந்த நம்பிக்கைக்கமைய, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

 'ஒரே நாடு ஒரே சட்டம்' : மேலும் ஒரு முஸ்லிம் விலகல்!

Next Story

ரணில் சீர்குலைத்து விட்டார்!