எனது பொய்கள் – ஹக்கீம்

தான் அரசியலில் நிறைய பொய் பேசுவது உண்மைதான் என்பதனை ஹக்கீம் இப்போது பகிரங்கமாக ஏற்றுக் கொள்வதுடன் அதனை நகைச்சுவையாக பேசியும் வருகின்றார்.

அவற்றையும் கேட்டு அவரது விசிரிகள் கைகொட்டி ஆரவாரம் செய்து வருகின்றார்கள். எப்படி இருக்கின்ற சமூகம் உணர்வு-அறிவு. இது தொடர்பான அவரது பேச்சுக்களை சமூக ஊடகங்கள் இப்போது காட்சிப்படுத்தி வருகின்றன.

எல்லோருக்கும் ஐ வில் டுவிட் என்பது அவருக்கு மூச்சுப்போலதான், இதனை அவர் அனைத்து முஸ்லிம்களுக்கும் நாகூசாமல் சொல்லி இருக்கின்றார். எனவே ஒட்டு மொத்த சமூகத்தையும் அவர் ஏமாற்றி சாதனை படைத்திருக்கின்றார்.

இது தவிர பல அரசியல் தலைவர்களுக்கு தான் எழுதிக் கொடுத்த பொய்களை- அபாண்டங்களை பேச வைத்ததை அவர் பெருமைபட மேடையில் சொல்லியும் வருகின்றார். தனி நபர்களுக்கு, ஊர்களுக்கு கொடுத்த எம்பி. வாக்குறுதிகள்.

இதில் சாய்ந்தமருதுவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்று ஒரு நீண்ட பட்டியல். பிரதேச சபை தவிசாளர் பதவிகள், ஒலுவிலுக்கு மெகா தொழில் பேட்டை மடவளைக்கு புதிய நகர சபை என்று இவற்றை ஆயிரம் பக்க புத்தகம் போட்டு சொல்ல முடியும்.

தனது தேர்தலுக்கு பல உயிர்களைப் பலி கொடுத்ததையும் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி இருந்தார்.  அந்தக் கதை சமூகத்துக்கு இன்னும் முழுமையாகத் தெரியாது!

ஆனால் அவருக்கென்று கூஜா தூக்க ஒரு கூட்டத்தை அவர் போகும் இடமெங்கும் வளர்த்துவிட்டிருக்கின்றார். அதிகாரம் கையைவிட்டுப் போக பிடியும் தளர இடமிருக்கின்றது.

இப்போது சஜித்தை திட்டி அனுரவை மகிழ்விக்கின்ற நாடகத்தையும் மனிதன் அரங்கேற்றிக் கொண்டு வருகின்றார். கண்டியில் அவருக்கு வாக்குப் போட்ட ளுதுடீ. ஆதரவாலர்கள் இப்போது என்ன நினைக்கின்றார்களோ தெரியாது.

பணம் என்று வரும் போது பிணமும் வாய்திறப்பதால்தான் இந்த ஆட்டங்கள் தொடர்கின்றன. கிழக்கு சமூகம் விளிக்காதவரை அவர் தனிக்காட்டு ராஜாதான். முஸ்லிம் சமூகத்தின் நிலை அதோ கெதிதான்.

Previous Story

ஜின்களின் வோட்டு மு.கா.வுக்கு...!

Next Story

பாகிஸ்தானுக்கு நேரடி ஆதரவு அளிக்கும் 3 நாடுகள்