எனது உயிருக்கு ஜனாதிபதியே பொறுப்பு- ரொசான் ரணசிங்க

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் ரொஷான் OUT !

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பதவிகளில் இருந்தும்  ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்  சபை தொடர்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் முறுகல் நிலை காரணமாக ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்பாசனம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளை ரொஷான் ரணசிங்க வகித்திருந்தார்.

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் : ரணிலின் அதிரடி நடவடிக்கை | Sports Minister Roshan Ranasinghe

காரசாரமான நாடாளுமன்ற உரை

இதேவேளை, இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  ரொஷான் ரணசிங்க, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் : ரணிலின் அதிரடி நடவடிக்கை | Sports Minister Roshan Ranasinghe

அத்துடன், தான் அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியானவர் என்றும் உரையாற்றியிருந்தார்.

அத்துடன், நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் என்னை எச்சரித்தார் என்றும், ரணில் ஒரு பாம்பு நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் எனவும் ரொஷான் ரணசிங்க  தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

…………..

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (27.11.2023) உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ நடுவீதியில் நான் படுகொலை செய்யப்படலாம்.

உயிர் அச்சுறுத்தல்

இந்த உயிர் அச்சுறுத்தலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க | Roshan Ranasinghe To Accuses Ranil

அத்துடன் தாம் அமைச்சுப் பதவி வகிப்பதற்கு தகுதியானவர் எனவும், மக்களின் வாக்குகளினால் தெரிவானவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அரசியலில் எவ்வித ஊழல் மோசடிகளிலும் தாம் ஈடுபட்டதில்லை எனவும், சொந்த வியாபார முயற்சிகள் மூலம் கடின உழைப்பில் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்க எவ்வித தகுதியும் இன்றி அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தம்மை பழி வாங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தாமும் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பழையவற்றை மறந்து தற்பொழுது தம்மை பழிவாங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க | Roshan Ranasinghe To Accuses Ranil

தமது நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்படுவதாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிரிக்கெட்டில் நிலவிவரும் மோசடிகளை தடுக்க முடியாவிட்டால் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேனும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Story

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் 

Next Story

USA அதிபர் பைடனின் அறிவுரை: போர் நிறுத்தம் நீட்டிக்கிறது? இஸ்ரேல் - ஹமாஸ்