எத்தியோப்பியா  தாக்குதலில் 230 பேர் பலி

SOUTH OF ETHIOPIAN BORDER, CENTRAL NORTHERN KENYA - FEBRUARY 3: OLF rebels are regrouping in Northern Kenya to safety, February 3rd, 2006, in Kenya. The OLF is orgaznied militarely as a coventional army, with its platoon, batallion, regiments. (Photo by Jonathan Alpeyrie/Getty images)

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

ஒரொமியா மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதை அந்த அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன.இந்த அமைப்புகள் அவ்வப்போது மக்கள், ராணுவம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அம்ஹரா என்ற இனக்குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

மாலத்தீவில் யோகாவுக்குள் புகுந்து தாக்குதல் 

Next Story

ஒரு தந்தை - மகனின் வினோத சந்திப்பு!