கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் சந்தன அபேரத்னவின் தகவல்படி, சட்ட வரைவு நிபுணர் திணைக்களத்தினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வேட்புமனுக்களை அமைச்சர்கள் இணக்கப்பாட்டுக்கு அமைய இரத்துச் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டது.
இதன்படி, மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான திருத்தங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த சில வாரங்களில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதே வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.