உள்ளாட்சி தேர்தலுக்கும் ஆப்பு!

-நஜீப்-

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்ட படி நடக்கும் என்று ஆளும் தரப்பு இரண்டாம் மட்டத் தலைவர்கள் கதை விட்டாலும் ஜனாதிபதி ரணிலும் பிரதமர் தினேசும் அதில் திருத்தம் செய்த பின்னர்தான் தேர்தல் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே போன்று சட்டச் சிக்கல்கள் வராத பட்சத்தில் உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திட்டமிட்டபடி நாம் நடாத்தவோம் என்று தேர்தல் திணைக்கள மேல் மட்ட அதிகாரிகள் கூறி வருகின்றார்கள்.

சட்டச்சிக்கள் இல்லாதா வரை என்ற வார்த்தையில் வஞ்கம் இருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம். ஒரு வருடம் ஒத்திவைத்த தேர்தலை தள்ளிப் போட முடியாது என்று சொல்கின்றவர்களே இப்போது உள்ளாட்சி சபைத் தேர்தலில் சட்டச்சிக்கல் பற்றி சந்தேகத்துடன் கருத்துக் கூறுவது ஜனாதிபதி பிரதமர் நிலைப்பாட்டுக்கு இசைவாகத்தான் இது விடயத்தில் தீர்மானங்கள் வரும் என்றுதான் நாம் இந்தக் கருத்துக்களைப் பார்க்க வேண்டும்.

அனேகமாக இந்தத் தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலைப் போலவே ஆப்பு வைக்கத்தான் ஆளும் தரப்பு முயல்கின்றது என்று நாம் நம்புகின்றோம்.

நன்றி– 30.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலங்கை கிரிக்கெட்   வீரர் தனுஷ்க கைது!

Next Story

உடதலவின்ன ஊடகவிலாளர் கூட்டணியின் இடைக்கால நிருவாக சபை அறிமுகம்