உலக வலம் 10.09.2023

-யூசுப் என் யூனுஸ்-

1

LIVE! Japan Lunar Lander XRISM + SLIM Launch - YouTube

நிலவுக்குப் போன ஜப்பான்!

சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா விண்ணுக்குப் போய் அசத்தியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து ஜப்பானும் இப்போது 07.09.2023 தனது ஸ்லிம் விண்கலத்தை நிலவுக்கு ஏவி இருக்கின்றது. கடந்த மாதம் 23-ந் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக இந்தியா தனது விண்கலத்தை தரையிறக்கியது.

அந்தவகையில்  நிலவின் தென் துருவ பகுதி அருகே கால் பதித்த முதல் நாடு இந்தியா. மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் ஏவவில்லை. மொத்தம் 3 முறை ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

நிலவின் பாறைகளை ஆராய்வதில் ஸ்லிம் விண்கலம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து நிலவில் கால் பதிக்க இருக்கும் 5-வது நாடு ஜப்பான். இயற்கை வளங்கள் நிலவில் கிடைக்குமாக இருந்தால் அங்கும் ஆதிக்கப் போட்டி சண்டை சச்சரவுகள் அதற்கான சட்டதிட்டகள் என்றெல்லாம் அமைய வேண்டி இருக்கும்.

2

India Versus China - Wasatch Global Investors

நாம் நலமே இந்தியா-சீனா!

வரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஜி 20 உச்சி மாநாடு  டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிசி சுனக், பிரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி, ஜப்பான் பிரதமர் புமியோ மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆனால், சீன அதிபர் ஜி ஜின் பிங் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில், சீன பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மா நிங் நேற்று கூறும்போது, ‘சீனா-இந்தியா இடையிலான உறவு நிலையாக உள்ளது.

இரு நாடுகள் இடையே பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீனா – இந்திய உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுவது இரு நாட்டு மக்கள் நலனுக்கும் நல்லது. ஜி20 அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து தீவிரமாக பங்கேற்கிறது” என்றார். மோதல்கள் அழிவில்தான் வந்து முடியும் என்பதனை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது.

3

AT&T to Carry the New iPhone 15 Series

ஐ பேனுக்குத் சீனா தடை!

சீனாவில் அதிகாரிகள் ஐ-போன் பாவிப்பதற்குத் தடை விதிக்கபட்டிருக்கின்றது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தச் செய்தியை சொல்லி இருக்கின்றது. சீனாவின் அரசு துறை அதிகாரிகள் ஐ-போன் மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் சாதனங்களை பணியின் போது பயன் படுத்த தடை வித்தக்கபட்டிருக்கின்றது.

அத்துடன் எக்காரணம் கொண்டும் அவற்றை அலுவலகங்களுக்கு எடுத்து வரக்கூடாது என்ற கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம் மாதம் ஆப்பில் நிறுவனத்தின் புதிய ஐ-போன் மாடல் வெளிவர இருக்கின்ற இந்த நேரத்தில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தடை உத்தரவில் ஆப்பில் நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனங்களுக்கும் தடைகள் விதிக்கப்படவில்லை. இந்தத் தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் கோட்க சீன அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது அவர்கள் நமக்குப் பதில் வழங்க முன்வரவில்லை என்று குறிப்பிடுகின்றது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

4

North Korea's leader is in Russia to meet Putin, with both locked in standoffs with the West

வியாபாரத்தில் வரும் ஜீம் ஜங்!

சர்ச்சைக்குறிய வட கொரிய அதிபர் ஜீம் ஜங் உன் ரஸ்யாவுக்கு வருகின்றார். அவர் பெரும்பாலும் ரயிலில் வரலாம் என்று கணிக்கப்படுகின்றது. உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்ற நாடு வட கொரிய. அவர் தனது இந்த விஜயத்தின் போது தனது ஆயுதங்களை மொஸ்கோவுக்கு விற்பது பற்றியும் பேசுவார்.

அத்துடன் உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக ஆணு ஆயுதங்களைப் பயன்; படுத்த வேண்டுமாக இருந்தால் அந்தக் காரியத்தைச் செய்யவும் ஜீம் ஜங் உன் தயாராகவே இருக்கின்றார். வட கொரிய அதிபரின் ரஸ்யா விஜயத்துக்கு அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா உக்ரைன் ஐரோப்பிய நாடுகள் கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

தற்போது உக்ரைன் ரஸ்யா எல்லைக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத்துவது புடினுக்குப் பெரும் கௌரவப் பிரச்சினையாகவும் பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. இதனால் உக்ரைன் போரில் அடுத்த கட்ட நகர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் புடினுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் போரில் இந்திய நடுநிலையாக இருக்கின்றது. சீனா, ஈரான், வடகொரிய போன்ற நாடுகள் ரஸ்யா சார்பு நிலைப்பாட்டில் இருக்ககின்றன.

5

World Events(1940-1960)Yuri Gagarin, first man in space. - History of animation

விண் பயணி இறந்து விட்டால்?

இப்போது பல நாடுகள் விண் பயணத்தில் ஆர்வமாக இறங்கி இருக்கின்றன. முதலில் விண் பயணத்தை துவங்கிய நாடு ரஸ்யா. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா. அதனால் யூரிககரின், நில் ஆம்ஸ்ரோங் என்பவர்கள் விண்வெளி நாயகர்களாகி இருக்கின்றார்கள்.

மனிதன் விண்ணை ஆய்வு செய்யத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை விண்வெளி வீரர்கள் 20 பேர் பூமிக்குத் திரும்பாமலே இறந்துள்ளனர். விண் பயணம் சவாலானதாக இருந்தாலும் சிலர் மட்டுமே இதுவரை இறந்திருக்கின்றார்கள்.

இப்போது ஆய்வுகளுக்கு மட்டுமல்லாது வணிக ரீதியிலும் விண் பயணங்கள் துவங்கி இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் பூமிக்கு அருகில் இருக்கும் விண்கலத்தில் இறந்தால், சில மணி நேரங்களில் அவரது குழுவினர் உடலுடன் பூமிக்கு அனைவரும் திரும்ப முடியும். இதே மரணம் நிலவில் நடைபெற்றால் பூமியை வந்தடைய சில நாட்கள் ஆகும்.

ஒரு விண்வெளி வீரர் இறந்து விட்டால் அப்போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து விதிகள் ஒழுங்குகளும் தற்போது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

TIME Magazine Cover: Yuri Gagarin - Apr. 21, 1961 - Russia - Cosmonauts -  Space Exploration

நன்றி: 10.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மாலத்தீவு:'இந்தியாவே வெளியேறு'  சீனாவுக்கு பெருகும் ஆதரவு 

Next Story

பாத்திமாவை விஷ, ஊசி செலுத்தி கொலை செய்தேன் - பாட்டியின் வாக்குமூலம்