உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. மது குடிப்பது உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், எந்த நாட்டு மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
குறிப்பாக இந்தியர்கள் சராசரியாக எவ்வளவு மது குடிக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம். ஸ்டாடிஸ்டா என்ற நிறுவனம் உலகில் எந்த நாட்டில் மக்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தான் எப்போதும் இந்த லிஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தாண்டும் கூட அது தொடரவே செய்கிறது. அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் டாப் 10 நாடுகள் மற்றும்
முதலிடம் யார் இந்த லிஸ்டில் ரஷ்யா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. பல ஆண்டுகளாகவே ரஷ்யா தான் முதலில் இருக்கிறது. அங்கு ஒரு நபர் சராசரியாக 16.8 லிட்டர் மதுவை குடிக்கிறாராம். ஓட்கா அங்குத் தேசியப் பானமாக இருக்கிறது.
அது கலாச்சாரத்திலும் பாரம்பரியத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் பீர் விற்பனையும் அதிகரிக்கிறதாம். அங்கு ஆண்களே அதிகம் மது குடித்தாலும், பெண்கள் மது குடிப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அடுத்தடுத்த இடங்கள் இதில் 2வது இடத்தில் கிரீஸ் வருகிறது. அங்கு ஒரு நபர் சராசரியாக 14.4 லிட்டர் மது குடிப்பாராம்.! அங்கு ஒயினுக்கு தனியாக டயோனைசஸ் என்ற கடவுளே இருக்கிறார். சொந்தங்கள் இணையும்போது மது குடிக்கும் பழக்கம் அங்கு அதிகமாகவே இருக்கிறது.
இதில் அடுத்து ஆப்பிரிக்க நாடான லெசோதோ வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தச் சிறிய நாட்டில் ஒருவர் சராசரியாக 12.9 லிட்டர் மது குடிக்கிறார். அங்கு சில மதச் சடங்குகளில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நாட்டில் பெண்களே அதிகம் மது குடிக்கிறார்களாம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் இதில் 4வது இடத்தில் வருகிறது. அங்கு ஒருவர் சராசரியாக 12.1 லிட்டர் மது அருந்துகிறது. அங்கு ரம் தான் பிரபலமான பானமாகும். மேலும், கரும்பு மூலம் தயாரிக்கப்பட்ட பீரும் அங்குப் பிரபலம்..
நம்ம ஊரில் டீ குடித்துவிட்டுக் கதை பேசுவது போல, அங்கு பொது இடத்திலேயே மது குடித்துவிட்டுக் கதை பேசிக் கொண்டு இருப்பார்களாம்! மற்றொரு கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி சராசரியாக 12 லிட்டர் மதுவுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கிகள் மற்றும் பீர்களையே மக்கள் விரும்பு குடிக்கிறார்கள். தேங்காய் தண்ணீருடன் கரீபியன் நாடான கிரெனடா 11.8 லிட்டருடன் 6வது இடத்தில் வருகிறது.
200 ஆண்டுகள் பழமையான நீர் சக்கரங்களால் தயாரிக்கப்படும் ‘ரிவர் அன்டோயின் எஸ்டேட் ரம்’ இங்கு மிகவும் பிரபலமானது. உள்ளூர் மக்கள் அதைத் தேங்காய் தண்ணீருடன் கலந்து குடிப்பார்களாம். இது கிரெனடாவின் ஆன்மாவாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய நாடான போலந்து, 11.7 லிட்டருடன் 7வது இடத்தில் வருகிறது.
திருமணங்கள், இரவு விருந்துகள் என அனைத்திலும் ஓட்கா ஒரு முக்கியப் பங்கு வகிக்கும்.. இப்போது பீர்களும் கூட வேகமாக விற்பனையாகி வருகிறதாம். சர்ப்ரைஸ் இதில் பெலாரஸ் 8வது இடத்தில் வருகிறது. அங்கு சராசரியாக ஒருவர் 11.6 லிட்டர் மது அருந்துகிறார்.
வீட்டிலேயே மதுவைத் தயாரித்துக் குடிக்கும் பழக்கமும் இங்கு அதிகம். அடுத்த இடத்தில் 11.6 லிட்டர் மதுவுடன் பல்கேரியா வருகிறது. பல நூறு காலமாகவே அங்கு ஒயின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் ஒயின் சுற்றுலா என்றே கூட தனியாக இருக்கிறது. அடுத்து 10வது இடத்தில் ஆஸ்திரேலியா வருகிறது. அங்கு சராசரியாக ஒருவர் 11.5 லிட்டர் குடிக்கிறார். அங்கு பீர் ஆதிக்கம் செலுத்தினாலும், ஒயின் விற்பனையும் மெல்ல அதிகரிக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டில் சராசரியாக ஒரு நபர் 4.98 லிட்டர் மதுவை மட்டுமே குடிக்கிறார். இது டாப் 10 நாடுகளில் ஒரு நபர் குடிக்கும் மதுவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானது. இந்தியாவின் கலாச்சாரம் மதுவுக்கு எதிராக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
அதேநேரம் இந்தியாவில் இளைஞர்களிடையே மது பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. கவனம் இது டாப் 10 நாடுகள் என்றாலும் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மது குடிப்பது முழுக்க முழுக்க உடலுக்கு கேடானது.
அதிகளவில் மது குடித்தால் கல்லீரல் நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்களுக்கு ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது. இது மன ஆரோக்கியம், தூக்கத்தைக் கூட பாதிக்கிறதாம். பல மருத்துவர்கள் சோஷியல் டிரிங்கிங் கூட வேண்டாம். முழுமையாகத் தவிருங்கள் என்றே சொல்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!





