3 மடங்கு வேகம்.. மிமீ மாறாத துல்லியம்.

பல நாடுகள் தங்களின் உள்கட்டமைப்புத் திட்டங்களை முடிக்கப் போராடி வரும் வேளையில், சீனா 1.22 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மாபெரும் ரயில் நிலையத்தை வெறும் 38 மாதங்களில் கட்டி முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிட்டது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் மெட்ரோ ரயில்கள் புகுந்து செல்லும் அதே விசித்திரமான ‘சோங்கிங்’ நகரத்தில்தான் இந்த உலக அதிசய ரயில் நிலையமும் அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உயர்மட்டக் குழுவினர் உடன் கடந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவருடன் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கும் உடன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தில் உலக வல்லரசுகள் எதிர்பார்த்தபடி நல்ல முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தப் பயணத்தைத் தொடர்ந்து எலான் மஸ்க் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
சீனா பிரம்மாண்ட ‘சோங்கிங் ஈஸ்ட்’ ரயில் நிலையத்தின் கட்டுமானம் பயணம் குறித்த வீடியோவை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். பொதுப் போக்குவரத்து திட்டங்களை வெறுக்கும் எலான் மஸ்க் இதைப் பகிர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதில் விஷயம் இல்லாமல் இல்லை..

சீனா அந்த ரயில் நிலையம் வெறும் 38 மாதங்களில் கட்டியுள்ளது. அதுவும் ஒரு ரோபோ ராணுவத்தால் கட்டி முடித்துள்ளனர். இது எப்படிச் சாத்தியம் என்பதே உலகையே வியக்க வைத்துள்ளது. சோங்கிங் நகரம் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது. இரண்டாம் உலகப் போரின்போது சீன தேசியவாத அரசின் தலைநகரமாகவும் இது செயல்பட்டது.
1960களில் மாவோ சேதுங்கின் தேர்ட் பிரண்ட் பிரச்சாரம் மூலம், அமெரிக்க அல்லது சோவியத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகச் சீனாவை வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்ல முடிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாகவே சோங்கிங் மிகப் பெரிய தொழில் மையமாக உருவெடுத்தது.
மிக பெரிய ரயில் நிலையம் இன்று ஆண்டுக்கு $440 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஜிடிபியைக் கொண்டுள்ள இந்த மெகா நகரம் மோட்டார் சைக்கிள், ஆட்டோமொபைல், லேப்டாப் மற்றும் செமிகண்டக்டர் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கிறது. இவர்களின் அசுர வேகத் தேவையைப் பூர்த்தி செய்யவே சோங்கிங் ஈஸ்ட் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது.
இதன் பரப்பளவு மட்டும் 1.22 மில்லியன் சதுர மீட்டராகும். இது உலகின் மிக பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் 15 பிளாட்பாரங்கள், 29 தண்டவாளங்கள் மற்றும் 8 மாடிகளைக் கொண்ட மல்டி-மோடல் போக்குவரத்து மையமாகும். நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 16,000 பயணிகளைக் கையாளக்கூடியது.
மேலும், இங்கிருந்து பயணிகள் உலகின் மிகப் பெரிய மோனோ ரயில் நெட்வொர்க்கிற்கு எளிதாக மாற முடியும். ரோபோக்கள் இந்த ரயில் நிலையத்திற்கு மே 2022ல் புளூபிரின்ட் தயாரிக்கப்பட்டது. 2025ல் இதை மக்கள் பயன்பாட்டிற்கே திறந்துவிட்டார்கள் என்றால் அதற்கு ரோபோ புரட்சி தான் காரணமாக இருந்துள்ளது.
வறண்ட வானிலையைக் கொண்ட கடினமான இந்த மலைப்பகுதியில் மனித உழைப்பால் செய்ய முடியாததை இந்த ரோபோக்கள் செய்துள்ளன. லிடார் (LiDAR), ஏஐ (AI) மற்றும் 5ஜி (5G) தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள், மனிதர்களை விட 3 மடங்கு வேகத்தில் மில்லிமீட்டர் துல்லியத்துடன் கான்கிரீட்டைச் சமப்படுத்தின.
இது தொழிலாளர் செலவை 40% குறைத்தது. 3 மடங்கு வேகம் மேலும், 800 கிலோ எடையுள்ள ராட்சத கண்ணாடி பேனல்களை மிகத் துல்லியமாகப் பொருத்தி, 3 மடங்கு வேகத்தில் இந்தப் பணிகளையும் முடித்தது. இதன் மூலம் விபத்து அபாயங்களை 90% குறைத்தது.
எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை 24/7 கண்காணிக்கத் தனியாகக் கண்காணிப்பு ரோபோக்கள் களத்தில் இறக்கப்பட்டன. இந்த ரோபோக்கள் தொழிலாளர் செலவைப் பாதியாகக் குறைத்து, சராசரி வேலைத் திறனை 3 மடங்கு அதிகரித்ததுடன், விபத்துகளை 90% குறைத்துள்ளது.
இந்த புதிய ரயில் நிலையம் சோங்கிங் நகரத்தை 14 முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. இங்கிருந்து பயணிகள் மிக எளிதாக முக்கிய நகரங்களுக்குச் சென்றடைய முடியும். இவ்வளவு பெரிய உட்கட்டமைப்பு திட்டத்தைச் சீனா வெறுமன ரோபோக்களை வைத்து முடித்துள்ளது மாபெரும் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.




