உறங்கும் தனித்துவக் கட்சிகள்!

-நஜீப்-

பொதுவாகத் தேர்தல்கள் நெருங்கி வருகின்ற நேரங்களில் தனித்துவ சிறுபான்மைக் கட்சிகள் நாம் தான் இந்த நாட்டில் ராஜாக்களைத் தீர்மானிப்போம், நமது ஆதரவு இல்லாது எவரும் அதிகார பதவிகளுக்கு வர முடியாது என்றுதான் மேடைகளில் உரத்துக் கூறுவார்கள். ஆனால் இந்தத் முறை அவர்கள் உறக்கத்தில் இருக்கின்றார்கள் என்பது நமக்கு நன்றாகப் புரிகின்றது.

ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் வருமாக இருந்தால் மாற்றன் தோட்டத்தில் காய்பறிக்கின்ற ஒரு முயற்சியில் வழக்கம் போல அவர்கள் இறங்குவார்கள். என்றாலும் இந்த முறை அப்படியான வாய்ப்புக்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

தேசிய பட்டியல் மற்றும் வேட்பாளர் பட்டியலுக்;கு பேரம் பேச முடியாது. கிடைப்பதை பெற்றுக் கொண்டு கூட்டணியில் கை கட்டி நிற்க வேண்டிய நிலைதான் இருக்கும். அப்படிக் கிடைக்கும் பிரதிநிதித்துவத்துக்கும் பெரும் கட்டுப்பாடுகளை கூட்டணி தலைமை இந்த முறை அவர்களுக்கு விதிக்க இருக்கின்றது.

காரணம் இவர்கள்  பெரும் பல்டிகள்-கிள்ளாடிகள் என்பதால். கிங் மேக்கார் கதைகள் எல்லாம் தொண்டா மற்றும் அஸ்ரஃப் காலத்துடன் முடிந்து விட்டது. இப்போது இருப்பவர்கள் எல்லோரும் டம்மிகள். இதனை சமூகமும் நாடும் புரிந்துதான் வைத்திருக்கின்றது.

நன்றி: 10.03.2024 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

71வது உலக அழகி செக் குடியரசு பெண்!

Next Story

பொதுத் தேர்தல்:ராஜபக்ஸாக்கள் கணிப்பு!