உக்ரைன்:தகர்ந்த கனவு நொறுக்கிய “மிரியா” மக்கள் வேதனை

சில நிமிடங்களுக்கு யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளின் சமீபத்திய முன்னேற்றங்கள் இதோ

  • யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை பெலாரூஸில் தொடங்கியுள்ளது. ஆனால் அதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இல்லை
  • ரஷ்யா, யுக்ரேன் மோதல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூடி விவாதிக்க உள்ளனர்.
  • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடவும், உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை தமது நாட்டுக்கு வழங்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
  • இன்று காலை கீயவ் மற்றும் கார்கீவ் பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டது. அதே நேரத்தில் வடக்கு நகரமான செர்ன்ஹைவில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஏவுகணை தாக்குதுக்கு இலக்கானது.
  • ரஷ்யா அதன் நாணயம் வீழ்ச்சியடைவதால் அதன் வட்டி விகிதத்தை 20% ஆக இரட்டிப்பாக்கியுள்ளது.
  • ரஷ்யாவின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
  • நிதி நெருக்கடி இருந்தபோதிலும், ரஷ்யா பொருளாதார தடைகளை “சமாளிக்கும்” என்று அந்நாட்டின் அதிபர் மாளிகை கூறியிருக்கிறது.

………………………………………..

உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷ்ய தாக்குதல்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் தாக்கி வருகிறது.

இந்தப் போர் இப்போது முக்கிய நகரங்களைச் சுற்றியும் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் அருகே ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. அதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

விமானம் அழிப்பு

இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். இருப்பினும், உக்ரைன் கண்டிப்பாக இந்த விமானத்தை மீண்டும் கட்டியெழுப்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய விமானம்

(இலங்கை பண மதிப்பில் 59400 கோடிகள் பெருமதி)

உலகிலேயே மிகப் பெரிய விமானமான AN-225 ‘Mriya’ உக்ரைன் ஏரோநாட்டிக்கல் நிறுவனமான அன்டோனோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ‘Mriya’ என்றால் உக்ரைன் மொழியில் ‘கனவு’ என்றே பொருள். இந்த விமானம் கடந்த 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது. சரக்கை ஏற்றுக் கொண்ட இந்த விமானத்தால் 4,500 கிமீ வரை செல்ல முடியும்.

கனவை அழிக்க முடியாது

இந்த விமானம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

மேலும், “ரஷ்யா எங்கள் மிகப் பெரிய விமானத்தை அழித்தாலும். அவர்களால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய நாடு என்ற எங்கள் கனவை அழிக்க முடியாது” என ட்வீட் செய்துள்ளார்.

மீண்டும் உருவாக்குவோம்

இது தொடர்பாக உக்ரைன் அரசும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகின் மிகப்பெரிய விமானமான “மிரியா” (கனவு) ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் கிய்வ் அருகே உள்ள விமான நிலையத்தில் அழிக்கப்பட்டது. நாங்கள் நிச்சயம் அந்த விமானத்தை மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற கனவை நிச்சயம் அடைவோம்” என்று பதிவிட்டுள்ளது.

மேலும் பகிரப்பட்ட அந்த விமானத்தின் படத்தில், “அவர்கள் மிகப்பெரிய விமானத்தை எரித்தனர், ஆனால் எங்கள் மிரியா ஒருபோதும் அழியாது” என்று தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு ட்விட்டரில் பலரும் வேதனை செய்துத்து ட்வீட் செய்து வருகின்றனர்

தற்போதைய நிலை

விமானத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை உறுதிப்படுத்த முடியாது தெரிவித்துள்ள விமானத்தைத் தயாரித்த அன்டோனோவ் நிறுவனம், விமானத்தை ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் விமானத்தின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா தனது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யக் கடற்படை தனது கப்பலில் இருந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.

பேச்சுவார்த்தை

உக்ரைன் நாட்டில் போர் 4ஆவது நாளை கடந்தும் தொடர்கிறது. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா அறிவித்தது.

முதலில் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் மறுத்தது. இருப்பினும் கடைசியால் பெலராஸ் நாட்டில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது.

5வது நாளாகவும் தாக்கும் ரஷ்யா; தளராத உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நிலையில்  உக்ரைனும் தளராது ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது.உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷிய படை அறிவித்த நிலையில் , உக்ரைன் படைகள் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது.

எனினும் முன்னதாக நேற்று குறிப்பிடத்தக்க அம்சம், ஏறத்தாழ 15 லட்சம் பேர் வசிக்கிற அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்ததுதான்.இதுதான் மத்திய உக்ரைனின் மிகப்பெரிய கலாசார, அறிவியல், கல்வி, போக்குவரத்து, தொழில் மையமாக திகழ்கிறது. நேற்று காலை வரை ரஷிய துருப்புகள், கார்கிவ் நகரத்தின் புறநகர்களில் தான் இருந்தன.

அதன் பின்னர் பிற படைகள் உக்ரைனுக்குள் தீவிர தாக்குதல் தொடுக்க நெருக்கின. ஆனாலும் உக்ரைன் படைகளும் அவற்றை எதிர்ப்பதில் தீவிரம் காட்டின. கார்கிவ் நகருக்குள் ரஷிய போர் வாகனங்கள் நகர்ந்து செல்வதையும், ரஷிய துருப்புகள் நகருக்குள் சிறுசிறு குழுக்களாக சுற்றித்திரிந்ததையும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.

அதில் ஒரு வீடியோவில் குண்டுவீச்சில் சேதம் அடைந்து ரஷிய துருப்புகளால் கைவிடப்பட்ட ரஷிய லகுரக வாகனங்களை ரஷிய துருப்புகள் ஆய்வு செய்ததையும் பார்க்க முடிந்தது. ரஷிய படைகள், கார்கிவ் நகருக்கு கிழக்கே எரிவாயு குழாயை வெடிக்கச்செய்தன. பெரும் மோதல்கள், தெருச்சண்டைகளுக்கு பின்னர் இந்த நகரை ரஷிய படைகள் வசப்படுத்தி விட்டன என தகவல்கள் வெளிவந்தன.

எனினும் உக்ரைன் படைகள் தளராமல் மீண்டும் போராடி அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து விட்டன. இதை கார்கிவ் பிராந்திய கவர்னர் உறுதி செய்துள்ளார்.

இத்தனை தீவிர சண்டைக்கு மத்தியிலும் ரஷிய அதிபர் புதின் தனது இறுதி திட்டங்களை வெளியிடவில்லை. அவரது நோக்கம், உக்ரைனை ஆட்சி செய்து வருகிற விளாடிமிர் ஜெலன்ஸ்கி அரசைத் தூக்கியெறிந்து தனது சொந்த ஆட்சியை ஏற்படுத்தி, ஐரோப்பிய வரைபடத்தை மீண்டும் வரைந்து, ரஷியாவின் பனிப்போர் கால செல்வாக்கை புதுப்பித்துவிடலாம் என்று நம்புகிறார் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதேவேளை உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்கள் மீதான அழுத்தம், மேற்கில் ருமேனியாவின் எல்லையில் இருந்து கிழக்கில் ரஷியாவின் எல்லை வரை நீண்டு கொண்டிருக்கும் உக்ரைனின் கடற்கரையின் கட்டுப்பாட்டை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதனிடையே பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உக்ரைன் சம்மதித்து விட்டதாக உக்ரைன் அரசு நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இதன்படி பெலாரஸ் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒரு குழுவை அனுப்புவதை உறுதி செய்துள்ளது. இதை ரஷியாவின் தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்திருப்பதாக ரஷிய ஊடகமான ‘ஆர்.டி.நியூஸ்’ தெரிவித்தது.ரஷிய அதிபரின் உதவியாளரான இந்த விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில்,

“இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தைக்கு தீர்மானித்துள்ளன. உக்ரைனியர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்புடன் இது நடக்கும். பயண பாதை 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

உக்ரைனிய பிரதிநிதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று நிருபர்களிடம் தெரிவித்ததாக ஆர்.டி.நியூஸ் தெரிவித்துள்ளது.

தற்போது 5வது நாளாக போர் நடைபெற்று வரும்நிலையில் அணு ஆயுத தடுப்புப் படையினரும் தயார் நிலையில் இருக்க்குமாறு ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பெலாரஸ் நாட்டின் ஹோமெல் நகரில் இன்று நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும் என உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்ப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஜனாதிபதி-விவசாயி முறுகல்

Next Story

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை: உடும்புப் பிடி நிபந்தனைகள்