‘உக்ரைனில்  சண்டை: இனித்தான் ஆட்டமே துவங்கப் போகின்றது’

யூசுப் என் யூனுஸ்

கியுவைப் பாதுகாக்க 16000ஆயிரம் வெளி நாட்டுக் கூலிப் படைகளை உக்ரைன் ஜனாதிபதி எதிர் பார்த்து அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றர்.  தற்போது 4000 பேர் வரை உள்ளே வந்திருப்பதாகவும் தகவல்கள்.

அவர்கள் தலைநகர் கியுவைப் பாதுகாக்கும் வேலைக்கு அமர்த்தப்பட இருக்கின்றார். இது விடயத்தில் நமக்கு இப்படி ஒரு சந்தேகம் வருகின்றது. கூலிப்படை என்ற பேரில் நேட்டோப் படைகள்தான் உள்ளே வருகின்றார்களோ தெரியாது. நேட்டோ தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வினியோகித்துக் வருவது தெரிந்ததே.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஸிப்போரிஷியா சுற்றுவட்டாரத்தில் தற்போது தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அது தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

இங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தியது பொறுப்பற்ற செயல் என்று மேற்கத்தியத் தலைவர்கள் ரஷ்யாவைக் கண்டிக்கின்றனர். போர் நடக்கின்ற கடற் பரப்பில் எஸ்டோனியா சரக்குக் கப்பலொன்றும் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றது. எஸ்டோனியா நேட்டோ அங்கத்துவ நாடுகளில் ஒன்று.

இந்தப் போரில் தாங்கள் நடுநிலை என்ற பெயரில் ரஷ்யாவை ஆதரிப்பதாக அமெரிக்க இந்தியாவைக் குற்றம் சாட்டி வருகின்றது. இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது. அதே நேரம் நேற்றும் புதினுடன் பிரான்ஸ் அதிபர் 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடி இருக்கின்றார்.

அவர் இதன் பின்னர்தான் மோசமான தாக்குதல்களை ரஷ்யா நடத்த இருக்கின்றது என்று செய்தியை தெரிவிக்கின்றார். போரை நிறுத்த வேண்டும் என்ற தனது கருத்தை புதின் சம்பூர்ணமாக நிராகரித்து விட்டார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

உக்ரைன் தற்போது நாசிகளிடம் இருக்கின்றது. அதனை மீட்காமல் ஓய மட்டோம் என்றும் புதின் கடுமையான நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரூன் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது 12 இலட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டைய நாடுகளில் அகதிகளாகப் போய் இருக்கின்றனர். இதற்கிடையில் உக்ரைன் அதிபர் பேச்சுவார்தைக்கு புதினை திரும்பவும் அழைத்திருக்கின்றார்.

Previous Story

தேர்தல்: ‘பலிகடாவாக நடத்தப்படும் உத்தர பிரதேச முஸ்லிம்கள்’

Next Story

தமிழ்-முஸ்லிம் தரப்பு சந்திப்பு!