உகண்டா போன பொதி என்ன?

-நஜீப்-

2021 ஏப்ரல் காலப் பகுதியில் சண்டே டைம்ஸ் ஒரு குறிப்புச் சொல்லி இருந்து. அதன்படி நூற்றி இரண்டு தொன் கடதாசி பல பொதிகளிடப்பட்டு விமானம் மூலம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

அந்தப் பொதிகளை எடுத்துச் சென்றதை குறிப்பிட்ட விமான நிறுவனமும் ஏற்றுக் கொள்கின்றதாம்.! ஆனால் அந்தப் பொதிகளில் என்ன இருந்தது என்பது பற்றிய தகவல் அறியும் சட்டத்தில் கோட்டால். (ஆர்ரிஐ) அவர்கள் அது இரகசியம். தர முடியாது என்று கை விரிக்கின்றார்கலாம்.

என்ன பழைய பேப்பரை எடுத்துக் கொண்டு வியாபாரத்திலா போய் இருப்பார்கள்;? அல்லது ரூபா நோட்டுக்களை அங்கு எடுத்துக் கொண்டு போய் இருப்பார்களா? அதனை யார்தான் அங்கு வாங்கப் போகின்றார்கள். அப்படி எடுத்துக் செல்லப்பட்டது டொலர்களாக இருந்தால் அது எத்தனை மில்லியன்களாக இருக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்?

அங்கு தேர்தல் பரப்புரைக்கு போஸ்டர்களை எடுத்துச் சென்றிருந்தால் அந்தக் கதையை மறைக்கத் தேவையில்யே! இந்தக் கதையும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022

 

Previous Story

நாங்க ரெடி நீங்க...?

Next Story

30-30அமைச்சரவை: திக்...திக்...கணங்கள்!!