நஜீப்
12.10.2025:நன்றி ஞாயிறு தினக்குரல்.
நமது நாட்டில் நடைபெற்ற மிகவும் துயரமான ஒரு சம்பவம்தான் ஈஸ்டர் தாக்குதல். அந்த தாக்குதல் ஐஎஸ்எஸ். கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
அதனால் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் தலைகுனிவும் வந்தது. தாக்குதலை நடாத்தியவர்கள் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
தாக்குதலின் பின்னணியில் அரசியல் தேவையும் இருந்ததாம். தாக்குதல்தாரிகளில் பலர் கூலிப்படையாக தொழில் பார்த்த பதிவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இதன் சூத்திரதாரிகளைத் தனக்குத் தெரியும்.
ஆனால் அவர்கள் மீது நடவடிக்கைக்கு வாய்ப்புக்கள் கிடையாது. நீதி மன்றம் அழைத்தால் தான் அவர்களை சொல்லத்தயார் என்றும் மைத்திரி கூறி இருந்தார்.
அந்தளவுக்கு அவர்கள் பலமானவர்கள் என்றும் மைத்திரி பகிரங்கமாக சொல்லி இருந்தார். இதற்கிடையில் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனவிரத்தன தாக்குதல் கோட்பாதர் இனம் காணப்பட்டுவிட்டார் என்று குறிப்பிட்டதாக சொல்லப்படுகின்றது.