அதிரடி மாற்றங்கள்-20
*****நஜீப் பின் கபூர்*****
“அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை மூடப்படும்”

1979 றூகுல்லா ஆயத்துல்லா கோமெய்னி தலைமையில் நடைபெற்ற இஸ்லாமிப் புரட்சிக்கு இன்று 46 வருடங்கள். துவக்கம் முதல் இந்த இஸ்லாமிய அரசு மேற்கு நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் முட்டி மோதிக் கொண்டிருந்தது.
இந்த அரசு பதவிக்கு வந்த நாள்முதல் அதனை வீழ்த்திவிட எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது நடக்கவில்லை. எண்ணற்ற பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் இராணுவ ரீதியில் பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக வளர்ந்து கொண்டிருந்தது.
இது அமெரிக்க இஸ்ரேல் மற்றுமல்லாது பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் பெரும் சவலாக இருந்தது. எனவே ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரோல் மட்டுமல்ல முஸ்லிம் நாடுகளும் பகிரங்கமாகவும் திறை மறைவிலும் சதிவேலைகளைச் செய்து கொண்டிருந்தன.
இன்று அதன் அருவடை கைக்கு எட்டிய தூரத்தில் வந்து நிற்க்கின்றது. இது பற்றி தகவல்கள் நிறையவே நம்மிடம் இருக்கின்றன. அது பற்றி விரிவாக எழுத இருக்கின்றோம். இப்போது சுருக்கமாக ஈரான் வீழ்ந்தால் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டி நாம் இங்கு தலைப்பிட்டு சொல்லி வைக்கின்றோம்.
![]()
01.ஈரானின் தற்போதய அரசு வீழ்கின்ற அதே வேகத்தில் சர்வதேச அரசியல் சமநிலையும் மாறும்.
02.இஸ்ரேல் என்ற நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அது அடைந்த மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக இது அமையும்.
03.உலக அரங்கில் ரஸ்யா-சீனா அரசியல் தலைமைத்துவத்துக்கு இது மாபெரும் சரிவையும் அவமானத்தையும் தலைகுனிவையும் கொடுக்கும்.
04.இஸ்ரேல் ஒத்துழைப்புடன் அமெரிக்கா மீண்டும் உலகில் நம்பர் வன் என்ற அந்தஸ்தை பெற்றுவிடும். இது குறைந்தது அரை நூற்றாண்டுகள் வரை தொடரலாம்.
05.உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அடிமை வாழ்வுக்கு வரும்.
06.அனைத்து முஸ்லிம் நாடுகளும் போல அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்து விடும். இதனால் அமெரிக்க அதிகமான பெருளாதார நலன்களை பெற்றுக் கொள்ளும்.
07.ஈரான் ராணுவ வல்லாதிக்கம் அமெரிக்க இஸ்ரேல் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்.
08.ஈரானில் தற்போது பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்களும் அவர்களுக்கு துனையாக இருந்தவர்களும் போர் குற்றவாளிகள் போல தண்டிக்கப்படுவார்கள்.
09.உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவிடும்.
10.ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் அழிக்கப்படும் அல்லது அவர்கள் சரணடைய வேண்டி வரும்.
11.சவுதி அரேபியாவை அனைத்து இஸ்லாமிய நாடுகளின் தலைமை நாடாக அமெரிக்காவும் இஸ்ரேலும் வளர்த்தெடுக்கும். அதற்கு சவுதி அவர்களுக்குக் கைமாறு செய்யும்.
12.அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை மூடப்படும்.
13.அடிமை வாழ்வுக்கு எதிரான உலகம் பூராவிலும் இஸ்லாமிய கடும்போக்கு குழுக்கள் தோன்றி வன்முறை உச்சம் தொடும்.
14.சீயாக்கள் பலிவாங்கப்படுவார்கள்.
15.சியோனிச செல்வாக்கு உலகம் பூராவும் கொடி கட்டிப்பறக்கும்.
16.அமெரிக்கா-இஸ்ரேல் கைப் பொம்மை அரசு ஈரானில் பதவியேற்கும்.
17.தற்போதய ஆட்சியாளர்கள் அனேகமாக ரஸ்யாவுக்குத் தப்பியோடுவார்கள்.
18.ஈரானில் மன்னராட்சி – ரீசா பஹ்லவி வாரிசு பதவியேற்றபார்.
19.பலஸ்தீன சுதந்திரப் போராட்டங்கள் ஓய்ந்து விடும்.
20.ஐ.நா.காட்சிப் பொருளாக மாறும்.





