ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி 85, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தாபா கமேனி, 55, ஈரானின் அடுத்த தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலை, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 1989 முதல், ஈரான் உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனி இருந்து வருகிறார்.