ஈரான் செயற்கைக்கோள் ரஷ்யாவுக்கு உதவுமா?

This handout video grab taken and released on August 9, 2022 by the Russian Space Agency Roscosmos shows the Soyuz-2.1b rocket carrying the Khayyam satellite blasting off from a launchpad at the Baikonur Cosmodrome. - An Iranian satellite launched by Russia blasted off from Kazakhstan early August 9, 2022, and went into orbit amid controversy that Moscow might use it to improve its surveillance of military targets in Ukraine. (Photo by Yuri KADOBNOV / AFP)
ஈரானிய செயற்கைக்கோளை, ரஷ்யா வெற்றி கரமாக விண்ணில் ஏவியது. இந்நிலையில், இது உக்ரைனை கண்காணிக்க, ரஷ்யாவுக்கு பயன்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரான், செயற்கைக்கோள், ரஷ்யா,

மேற்காசிய நாடான ஈரானின் ‘கயாம்’ செயற்கைக்கோளை, மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் இருந்து, ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராக்கெட் வாயிலாக வெற்றிகரமாக ஏவியது. இது, சுற்றுவட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டது.’அதி நவீன கேமராக்களைக் கொண்ட இந்த செயற்கைக்கோள், சுற்றுச் சூழலை கண்காணிக்க பயன்படுத்தப்படும்;
 

latest tamil news

 

தங்களைத் தவிர, மற்ற நாடுகள் இந்த செயற்கைக்கோளை அணுக முடியாது’ என, ஈரான் கூறியுள்ளது.ஆனால், உக்ரைனை கண்காணிக்க, ரஷ்யா இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தும் என்ற குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.

மேலும், தன் பரம எதிரியான இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை, இந்த செயற்கைக்கோள் வாயிலாக, ஈரான் கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற உருதுக் கவிஞர் உமர் கயாமை நினைவு கொள்ளும் விதமாக, இந்த செயற்கைக்கோளுக்கு, கயாம் என, ஈரான் பெயர் சூட்டியுள்ளது.
Previous Story

சுதந்திர தினம்: வெள்ளையனே வெளியேறு இயக்க வரலாறு- விடுதலைக்கான இறுதிப் போராட்டத்துக்கு பெயர் வைத்த இஸ்லாமியர்

Next Story

 இலங்கையை கதிகலங்கச் செய்துள்ள சீனா