ஈரான் களமிறக்கிய ராட்சத ட்ரோன்!

வெடிக்கும் மிகப்பெரிய போர்?

அமெரிக்காவை தாக்க தயார்?

அமெரிக்கா – ஈரான் இடையே கடும் மோதல் உள்ளது. இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அவர் ஈரானை சீண்டிப்பார்க்கலாம் என்பதால் அந்த நாடு தொடர்ந்து தங்களின் ராணுவ கட்டமைப்புகள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது டிரம்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ‛காசா’ என்ற பெயரில் ராட்சத ட்ரோனை களமிறக்கி உள்ளது. இந்த ட்ரோனின் பின்னணி குறித்த தகவல் திடுக்கிட வைக்கிறது. அது என்ன? வாங்க பார்க்கலாம். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு உள்ளது.

ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருநாடுகளும் எலியும், பூனையுமாகவே சண்டை செய்து வருகின்றன. இப்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

தற்போது அவர் புதிய அதிபராகவும் பொறுப்பேற்று விட்டார். முந்தைய அதிபர் ஜோ பைடனை விட டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் கடும் மோதலை கடைப்பிடிப்பவர். இதனை பலமுறை டொனால்ட் டிரம்ப் தனது பேச்சின் மூலம் நிரூபித்துள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் நடந்தது.

Iran's new drone has a 7,000 km range: report - Asia Times

இஸ்ரேல் – காசா போருக்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்களை ஈரானுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தியது. அப்போது டொனால்ட் டிரம்ப் சொன்னது என்னவென்றால், ‛‛ஈரானின் ராணுவ கட்டமைப்பு மட்டுமின்றி அணு உலை, மின்சார தயாரிக்கும் மையங்கள் மீது இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதில் இருந்தே ஈரான் மீதான டொனால்ட் டிரம்பின் பார்வையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பின்னணி இதுதான் டொனால்ட் டிரம்ப் இந்த கூற்றை சொன்னபோது அவர் அமெரிக்க அதிபராக இல்லை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அமெரிக்காவின் அதிபராகவே டொனால்ட் டிரம்ப் மாறிவிட்டார்.

இதனால் ஈரானுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. உலகில் ராணுவத்தில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அதிநவீன ஆயுதங்களை அந்த நாடு வைத்துள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் மூலம் அமெரிக்காவால் எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு ஆபத்து வரலாம் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் ஈரான் தனது முப்படைகளையும் தயாராக்கி வருகிறது.

போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி தங்களின் படை வலிமையை காட்டும் வகையான வீடியோக்களை ஈரான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது ஈரான் ராட்சத ட்ரோனை வடிவமைத்து அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரோனுக்கு ‛காசா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 மாதமாக காசாவில் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலால் எதிர்கொண்ட பிரச்சனை மற்றும் இஸ்ரேல் போரில் இறந்த காசா மக்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ட்ரோனுக்கு ‛காசா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

military tech drone warfare: Iran's better, stealthier drones are remaking global warfare - The Economic Times

இந்த ட்ரோன் குண்டு வீசும் வீடியோ தான் இப்போது ஈரான் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரோனின் எடை 3.1 டன் ஆகும்.

இறக்கைகள் நீளம் மட்டும் 22 மீட்டர் இருக்கிறது.

மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்.

35 மணி நேரம் இடை நிற்காமல் இயங்க முடியும்.

ஒரே நேரத்தில் 12 குண்டுகளை தூக்கி சென்று வீச முடியும்.

மொத்தம் 500 கிலோ வெடிமருந்தை சுமந்து சென்று எதிரி நாட்டை தாக்க முடியும்.

இத்தகைய வசதி கொண்டஇந்த ட்ரோனால் பறந்து கொண்டே 4 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவு வரை உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த முடியும் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் தான் ஈரான் வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா மற்றும் அதன் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை மிரட்டும் நோக்கத்தில் ஈரான் இப்படி வீடியோ வெளியிடுவது இது முதல் முறையல்ல. டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு 2 நாளுக்கு முன்பு பூமிக்கடியில் 500 மீட்டர் ஆழத்தில் ஈரான் அமைத்துள்ள ரகசிய கப்பற்படை தளம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது.

சுரங்கம் போன்ற அமைப்பில் ஸ்பீட் போட் (Speed Boat) ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்பீட் போட்களில் இருந்து குரூஸ் (Cruise) வகை ஏவுகணையும் ஏவி தாக்குதல் நடத்த முடியும் என்றும், இது ரேடாரில் இருந்து தப்பவும் முடியும் என்று ஈரான் அரசு தொலைக்காட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஸ்பீட் போட்டில் ஏவப்படும் ஏவுகணை தொடர்பான காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தது. இப்படியாக அமெரிக்கா மற்றும் அதன் அதிபர் டொனால்ட் டிரம்பை மிரட்டும் வகையில் அடுத்தடுத்து தனது படை பலம் தொடர்பான வீடியோக்களை ஈரான் வெளியிட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து ஈரான் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மிகப்பெரிய போர் வெடிக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. மத்திய கிழக்கு சமீபத்தில் இஸ்ரேல் – காசா போர் முடிவுக்கு வந்தது.

இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் அமைதி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதைய செயல்பாடு என்பது ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் உருவாகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Previous Story

காதலனை கொன்ற காதலிக்கு  ஆதாரமே இல்லாதபோதும் மரண தண்டனை! எப்படி?

Next Story

சவுதி சாலை விபத்து:15 உயிரிழப்பு.இந்தியர்கள்-9